பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்ன்ேபடவஞ்சிப்படலம் —# வஞ்சி வேந்தன், தனது வெற்றியைக் குறித்து, உச்சமாகவும், மந்தமாகவும் அதன்மேற் சமமாகவும் இசையினை அளந்து பாடியவராகத் தன்னைப் போற்றின இசைப்புலவருக்குப் பரிசில் வழங்குவது, கொடைவஞ்சி ஆகும். தூக்கி என்பது, செந்தூக்கு முதலான எழுவகைத் தூக்கினாலும் தூக்கி என்றும் கொள்ளப்படும். நிவப்ப என்றது, இடைத்தரமான ஒசையினை. பாடிய புலவர்' என்பதனால் பாணர் முதலியோரும் இப் பரிசிற்கு உரியராவர். சுற்றிய சுற்ற முடன்மயங்கித் தம்வயிறு எற்றி மடவார் இரிந்தோட - முற்றிக் குரிசில் அடையாரைக் கொண்டகூட் டெல்லாம் பரிசின் முகந்தன பாண். - - 51 பகைத்தார் நாட்டுப் பெண்கள் எல்லாம் தம்மைச் சூழ்ந்த சுற்றத்தாருடன் கூடி ஒக்கக் கலங்கியவராகத் தம் வயிற்றிற் புடைத்துக் கொண்டு, தம் நிலைகெட்டு ஒடும்படியாக, நம் வேந்தனானவன், அப் பகைவரது நாட்டை வளைத்துக் கொள்ளை கொண்ட பொருள்முழுவதும், தாம் பெறும் பரிசிலாகப் பாண்மக்களால் வாரிக்கொள்ளப் பெற்றனவே! கொண்டகூட்டெல்லாம்பரிசின் முகந்தன என்றலால்,இது கொடை வஞ்சி ஆயிற்று. குரிசில்-தலைவனும் ஆம். 16. குறுவஞ்சி-1 மடுத்துஎழுந்த மறவேந்தர்க்குக் - கொடுத்துஅளித்துக் குடியோம்பின்று. மண்டிப் படைகொண்டு எழுந்து சென்றவரான வீரத்தையுடையவஞ்சிவேந்தர்க்குப்,பகைநாட்டுமன்னன்,திறைப் பொருளைக் கொடுத்துத், தன் குடிமக்களுக்குத் தண்ணளிபண்ணிக் காத்துக் கொள்வது, குறுவஞ்சி ஆகும். வஞ்சிசூடிப் போனாருடைய போர்ச்செயல் முற்றுப் பெறாதே, பகையரசன் தந்த திறைபெற்று மீண்டுவருதலால், இது குறுவஞ்சி ஆயிற்று. - தாட்டாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான் வாட்டானை வெள்ளம் வரவஞ்சி-மீட்டான் மலையா மறமன்னன் மால்வரையே போலும் கொலையானை பாய்மாக் கொடுத்து. 52 போரிடத்தே எதிர்த்துநிற்க மாட்டாதவனாகிய தறு கண்மையினையுடைய பகைமன்னன், முழந்தாளினளவுக்குத்தாழ