பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் • . பிடுலா மன்னர் என்றது பகைவேந்தரை, இது இகழ்ச்சிக்குறிப்பு. வானத்து ஒளி' என்றது, ஞாயிற்றினது ஒளிவிளக்கத்தை, நாடெலாம் பின்னும் பிறங்கழல் வேய்ந்தன. என்றதால் பெருவஞ்சி ஆயிற்று. 22. பெருஞ்சோற்று நிலை திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவரெனப் பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று. இம் மறவர்கள் தம் பகைவரது வேற்றுப் புலத்தினை அழித்துத் தருவர்' என்று சொல்லி, வஞ்சி வேந்தன், அம் மறவர்களுக்கு மிக்க சோற்றை வீரர்கொள்ளும் முறையானே கொடுப்பது, பெருஞ்சோற்று நிலையாகும். - இதனைப் பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை என்று தொல்காப்பியர் கூறுவர். அரசன் படைஞருடன் இருந்து சோற்றுத்திரளை அவர்க்கு வரிசையறிந்து வழங்குதலான ஒரு மரபு இது. ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்' என வரும் புறப்பாட்டு (2) அடிகளும் இதனை விளக்கும். பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்’ எனச் சிலம்பு (25,144) கூறுவதும் காண்க. - இயவர் புகழ எறிமுரசு ஆர்ப்பக் குயவரி வேங்கை யனைய-வயவர் பெறுமுறையாற் பிண்டங்கோள் ஏவினான் பேணார் இறுமுறையால் எண்ணி இறை. - 58 அரசன், பகைவர் அழியும் வகையாலே ஆராய்ந்து, இசைக்கருவியாளர் புகழவும், கொட்டப்படும் முரசுகள் ஆரவாரிக்கவும், அரிவாளே போன்ற வரியினையுடைய வேங்கைப்புலியினைப் போன்ற தன் படைமறவர்கள், தாம் பெறுதற்குரிய முறைப்படியே பெற்று உண்ணும்படியாகச் சோற்றுத் திரளையைக் கொள்ளுதலை ஏவினான். இயவர்-இயத்தை உடையோர். குயம்-அரிவாள். வயவர். போர்மறவர். பிண்டம்-சோற்றுத் திரளை இறைவஞ்சி வேந்தன். 23. நல்லிசை வஞ்சி-1 ஒன்னாதார் முனைகெட இறுத்த வென்வேல் ஆடவன் விறன்மிகுத் தன்று. பகைவரது வேற்றுப்புலமானது அழியும்படியாகச் செய்த வெற்றிவேலினை உடையவனான படைத்தலைவனது, வெற்றியை