பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆய்வுரை

புடைய காஞ்சித்திணையிற் சேர்த்துள்ளார். பிற்பகுதியில் உள்ள பத்தும் இன்ன திணைக்குத்தான் உரியது என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவை. அதனால் எல்லாத் திணைகளுக்கும் பொதுவாக அமையுமாறு 'பொதுவியல்" என்று ஒரு திணையினை அமைத்து அதில் இப்பத்தினையும் சேர்க்கின்றார் முற்பகுதில் உள்ள பத்தில் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியருடைய காஞ்சித் திணையிற் சேர்க்கப்பெற்ற மேற்குறிப்பிடப்பட்ட எட்டு நீங்கலாக எஞ்சிய "மாற்றருங்கூற்றஞ்சாற்றிய பெருமை', 'கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை" என்ற இரு துறைகளும் போர்த்தொடர்புடையன என்று மேற்காட்டியபடி கொள்ளக் கூடியவையாயிருந்தும் அவையிரண்டும் பொதுவாக யாக்கை நிலையாமை, இளமை நிலையாமையினைக் கூறுகின்றவை என மதித்து ஐயனாரிதனார் பொதுவியலிற் சேர்த்துள்ளார். இம் முறையில் தொல்காப்பியக் காஞ்சித்திணைத் துறைகளில் ஒரு பகுதி புறப்பொருள் வெண்பாமாலைக் காஞ்சித்திணையிலும் மற்ருெரு பகுதி பொதுவியல் திணையிலும் இடம் பெறலாயின.

 தொல்காப்பியத்தில் "வெறியறி சிறப்பின் வெவ்வாய்வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்' (புறம் 60 என்று தொடங்கும் நூற்பா வெட்சித்திணையில் உள்ளது. இதிற் சொல்லப்பெறும் "போந்தை' 'வேம்பு' 'ஆர்' 'ஓடாக்கழனிலை' 'உடல்வேந்தடுக்கிய உன்ன நிலை' ஆகிய துறைகள் வெட்சித் திணைக்குத்தான் உரியவை என்று சொல்வது பொருத்தமாய்த் தோன்றவில்லை. ஏனெனில், சேர, சேழ பாண்டியர்களுடைய பூக்களின் சிறப்பினை எத்திணையிற் ' சொன்னாலும் பொருந்தும். அதேபோன்று ஓடாக்கழனிலையும் உன்ன நிலையும் எல்லாத்திணைகளுக்கும் பொதுவாயுள்ளவை. இந்நூற்பாவில் பிற்பகுதியில் வரும் 'காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை, வாழ்த்தல்" என்ற ஆறும் பொதுவாக வீரனுக்குச் செய்யும் சிறப்பினைக் கூறுவன வாகும். அதனால் எல்லாத்திணைகளுக்கும் பொதுவானவை எனலாம். இவைகளை மனதிற் கொண்டு பொதுவியல் என்ற தினை ஒன்றினை உருவாக்கி அதனுள் இத்துறைகளைக் கொண்டு வந்துள்ளார் ஐயனாரிதனார் என்பது பொருந்தும். இங்குனம் பொதுவியல் என்ற பன்னிரண்டாவது திணை புறப்பொருள் வெண்பாமாலையில் உருவாகியுள்ளது.