பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

176 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். ஒன்னார் தம் பகையை ஒழிந்து பணிந்து திறை கொடுப்பப் பகைமுனையுள் செலுத்தி நம்முடைய கொழுநர் பக்கத்தே வந்தார்; ஒன்றோடுஒன்று கூடிச்செலவு வளைவின்றிச் செங்கோல் அருகை அருந்திப் பாயும் வளைந்த கொம்பினையுடைய கலை கெட் டோடத் தேரினை எ-று. தேர் ஊர்ந்து நங்கேள்வர் உழைவந்தார் என்க. 278. நாண்முல்லை செறுநர் நாணச் சேயிழை யரிவை வருமனை வைகித் தற்காத் தன்று. (3 இ-ள். பகைவர் நாணச் சிவந்த ஆபரணத்தினை உடைய மடத்தை கணவன் பிரிந்த இல்லிலே தங்கித் தன்னைப் பரிகரித்தது எ-று. வ - று. கொய்தார மார்பிற் கொழுநன் றணந்தபின் பெய்வளை யாட்குப் பிறிதில்லை-வெய்ய வளிமறையு மின்றி வழக்கொழியா வாயில் நளிமனைக்கு நற்றுணை நாண். இ-ள். மட்டஞ்செய்த மாலையால் சிறந்த மார்பினை உடைய கணவன் பிரிந்தபின்பு இட்ட தொடியினை உடையாட்கு வேறொரு காவலும் இல்லை; இடக் கதவும் இன்றியே யாவரும் இயங்குதல் ஒழியாத வாயிலையுடைய பெரிய மனைக்கு நல்ல துணைமை நாணே எ-று. கொய்தாரமார்பு என்றவழி, அகரம் சாரியை. 279. இல்லாண் முல்லை கழுமிய காதற் கணவனைப் பழிச்சி இழுமென் சீர்த்தி யின்மலி புரைத்தன்று இ-ள். பொருந்திய காதற்கணவனை வாழ்த்திப் பலரும் இசைச் கும் அனுகரணத்தினை உடைய கீர்த்தியால் சிறந்த இல்லின் மிகுதி யைச் சொல்லியது எ-று.