பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

178 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். செவ்வரி கருவரி பரந்த மையுண்ட விழியினையும் தெரிந்த ஆபரணத்தினையும் உடையானை மணந்தவன் வருத்தம் நீங்கின மனத்துடனே விதியை ஏத்தியது எ-று. வ - று. திங்கள் விளங்குந் திகழ்ந்திலங்கு பேரொளி அங்கண் விசும்பி னகத்துறைக-செங்கட் குயிலனைய தேமொழிக் கூரெயிற்றுச் செவ்வாய்ப் பயில்வளையை நல்கிய பால். இ-ள். மதியிலங்கும், மிக்கு விளங்கும் பெரியசோதியினை உடைய அழகிய இடத்தினையுடைய சுவர்க்கத்திலே உறைவதாக; சிவந்த கண்ணினை உடைய குயிலின் இசைபோன்ற இனிய சொல்லினையும் கூரிய எயிற்றினையும் செய்ய வாயினையும் செறிந்த தொடியினையும் உடையாளை எனக்குத் தந்த விதி எ-று, 282. கற்பு முல்லை பொன்றிகழ் சுணங்கிற் பூங்க ணரிவை நன்றறி கொழுநனை நலமிகுத் தன்று. (7) இ-ள். பொன்போல் இலங்கும் சுணங்கினையும் பொலிந்த கண்ணினையும் உடைய மடந்தை நன்மையறியும் கொழுநனுடைய நன்மையைப் பெருகச் சொல்லியது எ - று. வ- று. நெய்கொ ணிணந்தூ நிறைய வமைத்திட்ட குய்கொ ளடிசில் பிறர்நுகர்க - வைகலும் அங்குழைக் கீரை யடகு மிசையினும் எங்கணவ னல்க லினிது. இ-ள். நெய்யைத் தன்னிடத்துக் கொண்ட நிணமும் தசையும் மிகக்கூட்டி ஆக்கின பொரிக்கறி உடைத்தான சோற்றைப் பிறர் அருந்துக, நாடோறும்; அழகிய தளிரையுடைய கீரையாகிய இலைக் கறியை நுகரிலும் எமது கொழுநன் அருளும் அது, இனிதாயிருக் கும் எமக்கு எ -று. குய் - நறை என்றுமரம். (8)