பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

182 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் மிக்க தெய்வமகள் கொல்லோ? இனியமொழியினையும் அஞ்சனம் மேவின விழியினையும் உடைய மடவாளிடத்து ஐயப்பாடு ஒழியாது துயரத்திலே அழுந்தா நின்றது, என்னுடைய நெஞ்சு எ-று. 287. துணிவு மாநிலத் தியலு மாத ராமெனத் (2) தூமலர்க் கோதையைத் துணிந்துரைத் தன்று. இ - ன். பெரிய பூமியிடத்து நடக்கும் காதலிளையுடையார் இவ ரெனச் சொல்லித் தூய்தான பூமாலையிளை உடையாளைத் தெளிந்து சொல்லியது எ-று. வ-று. திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும் இருநிலஞ் சேவடியுந் தோயும்-அரிபரந்த போகித முண்கணு மமைக்கும் ஆகு மற்றிவ னகடலித் தணங்கே. இ-ல். அழகிய நுதலும் வேர்முகிழ்க்கும்; தேளையுடைய மாலை யும் வாடும்; பெரியநிலத்தினைச் சிவந்த அடியும் பொருந்தும்; செவ்வரி கருவரிபரந்த நீண்ட இமையினை உடைய மையுண்ட விழி யும் இமைக்கும்; இவள் அகன்ற பூமியிடத்து மானிடமகளாகிய தெய்வமாகும் எ-று. மற்று; வினைமாற்று. இவள் ஆரும்என்க, 288. உட்கோள் இணரார் கோதையென் னெஞ்சத் திருந்தும் உணரா ளென்னையென வுட்கொண் டன்று. (3) இ-ல், கொத்து நிறைந்த மாலையினையுடையாள் என் மனத் திலே இருந்தும் என்னை அறியாள்என உள்ளத்திலே தலைவன் கைக் கொண்டது எ-று. வ-று. கவ்வை பெருகக் கரந்தென் மனத்திருந்தும் செவ்வாய்ப் பெருந்தோட் டிருநுதலாள்- அவ்வாயில்