பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

184 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள்.மிக்கு நடக்கும் விதனஞ் சிறக்க, தெரிந்த ஆபரணத் தினை உடையாள்தன் குற்றந் தீர்ந்த அழகிய நலத்தைக் கொண் டாடியது எ-று. வ - று. அம்மென் கிளவி கிளிபயில வாயிழை கொம்மை வரிமுலை கோங்கரும்ப இம்மலை நறும்பூஞ் சார லாங்கண் குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே. இ-ள். அழகிய மெல்லிதான வார்த்தையைக் கிளி பழகத் தெரிந்த ஆபரணத்தினைஉடையாள்தன் குவித்து அழகியவான கொங்கையைக் கோங்கு முகிழ்ப்ப இந்த வரையிடத்து நாறு மலரினை உடைய மலைப்பக்கத்துச் சிறுசுனைக் குவளைகள் பூத்தன, மிகப்பெரிய விழியினை எ-று. நற்காமத்து நலம்பாராட்டல் புணர்ச்சி தோன்ற வரும்; இஃது அன்னதன்று. 291. நயப்புற்றிரங்கல் கொய்தழை யல்குல் கூட்டம் வேண்டி எய்துத லருமையி னிறப்பப் புகழ்ந்தன்று. (6) இ-ள். கொய்தழையால் அணிந்த அல்குலையுடையாள் தள் புணர்ச்சியை விரும்பிப் பொருந்துதற்கு அருமையான் மிகவும் புகழ்ந்தது எ-று. வ-று பெரும்ட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க் கருமழைக்கண் வெண்முறுவற் பேதை-திருமுலை புல்லும் பொறியிலேனுழை நில்லா தோடுமென் னிறையி னெஞ்சே. இ . ள், மிக்க மடப்பத்தால் சிறந்த பார்வையிளையும் சிறிய நுதலினையும் சிவந்த வாயினையும் கரியமழைபோலக் குளிர்த்த கண்ணினையும் விளர்த்த எயிற்றினையும் உடைய மடவாள்தன் அழ கிய முலையைத் தழுவும் விதியிலாதேனிடத்துத் தரியாதே ஓடா நின்றது, என்னுடைய நிறையில்லாத மனம் எ-று. (7)