பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கைக்கிளைப்படலம் ஆண்பாற் கூற்று 292 புணரா இரக்கம் 185 உணரா வெவ்வம் பெருக வொளியிழைப் புணரா விரக்கமொடு 'புலம்புதர வைகின்று, இ-ள். பிறரறியாத துக்கம் மிகச் சுடர்விடும் ஆபரணத்தை உடையாளை மணவாத விதனத்தோடே தனிமையுறத் தங்கியது, எ-று. வ - று. இணரார் நறுங்கோதை யெல்வளையாள் கூட்டம் புணராமற் பூச றரவும் - உணராது தண்டா விழுப்படர் நலியவும் உண்டா லென்னுயி ரோம்புதற் கரிதே. இ-ள். தொத்து நிறைந்த நறிய மாலையினையும் இலங்குந் தொடியினையும் உடையாள் தன் புணர்ச்சி கூடாமையாலே பிறர் இகழும் ஆரவாரம் உண்டாகவும், அறியாது கெடாத சீர்மையினை உடைய நினைவு வருத்தவும் சிறிது உளதால், என்னுடைய உயிர் இனிப் பாதுகாத்தற்கு அரிது எ - று. 293. வெளிப்பட இரத்தல் அந்தழை யல்கு லணிநலம் புணரா வெந்துயர் பெருக வெளிப்பட விரந்தன்று. (8) இ - ள். அழகிய தழையணிந்த அலிருவினை உடையாள் தள் நல்ல நலத்தைக் கூடாத வெய்ய வருத்தம் மிகத் தோன்ற இரத் தது எ-று. வ - று. உரவொலி முந்நீ குலாய் நிமிர்ந் தன்ன கரவருங் காமங் கனற்ற - இரவெதிர முள்ளெயி றிலங்கு முகிழ்நகை வெள்வளை நல்காள் விடுமென் னுயிரே.