பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1. வெட்சிப்படலம் 11 பிலே வைத்த வேட்டு விச்சியர் வாள் போன்ற கண் இடந்துடிப்பச் செலுத்திற்று, பிரியத்தை, பலர்க்கு மொக்க எ-று, மகிழ்துடி ஒருங்கு உய்த்தன்று என்க, மகிழ்துடி: வினைத்தொகை. 13. தந்துநிறை வார்வலந்த துடிவிம்ம ஊர்புகல நிரையுய்த்தன்று (12) இ-ள், வாராலே கட்டின துடி கறங்க ஊரில் உள்ளார். விரும்ப ஆளிரையை மன்றத்திடத்துச் செலுத்தியது எ-று. எ-று. தண்டா விருப்பின டன்னை தலைமலைந்த வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று-கண்டாள் அணிநிரை வாண்முறுவ லம்மாவெயிற்றி மணிநிரை மல்கிய மன்று. இ-ன். தணியாத உவகையினையுடைய யவளாகித் தன்னுடைய சுவாமி தலையிலே சூடின வண்டு நிறைந்த நறுநாற்றம் வீசும் மாலை வாழ்வதாக என்று நோக்கினாள், அலங்காரம் உடைத்தாக ஒழுங்குபட்டு ஒளிவிடா நின்ற பல்லினையும் அழகிய பெருமையினை யும் உடைய மறத்தி, மணியணிந்த பசுமிக்க மன்றத்தை எ-று. எயிற்றி கண்டாளெனக் கூட்டுக 14. பாதீடு கவர்களைச் சுற்றங்கவர்ந்த கணநிரை அவரவர் வினைவயி னறிந்தீந் தன்று, (13) இ-ள். கவர்த்த தலையம்பிளையுடைய கிளை கொள்ளைகொண்ட பசு நிரையைச் செய்தார் செய்த தொழில்வகையை அறிந்து கொடுத்தது எ-று.