பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#}3 புற்று ஈரமுண்டு; புடைத்தமாரிலும் புஜங்களிலும் ஐலம் துளித்து கின்றது. 'துரக்கி வாரிப்போட்டாலும், யார் என்று கண்டதும் முகம் மலர்ந்தது. ஆனால் உடனே அடக்கிக் கொண்டு விட்டாள். ' செளக்கியமா? என்றேன். ' செளக்கியந்தான். வழியை விடறையா?" என்றாள். " இத்தனை நாள் கழிச்சு இப்பதான் பார்க்கிறோம். அதற்குள் ஒடனுமா? ' 'எனக்கு நேரமாச்சு: ஆத்தில் தேடுவாள் "நான் சிரித்துக் கொண்டே அவள் கையை உரமாய்ப் பிடித்தேன். அவள் உடல் வெட வெட வென உதறிற்றுஆனால் பயத்தாலா? பிடித்த கையின் விரல்கள், பாதாளக் கொலுசின் கொக்கிகள் போல் வளைந்தன - ஆனால் பயத்தாலா? பிரதிஷ்டையிலிருந்து காகம் என் கையையும் என் பிடியில் அவள் கையையும் பார்த்துக் கொண் டிருந்தது.

  • உஷ்-என்னை விட்டுடுடா-விட்டுடுடா-'

'நான் சிரித்தேன். உன்னை என்ன, கடிச்சு முழுங்கிடுவேனா? ஆமாம், முழுங்கிவிடப் போகிறேன்!' என்றேன். -

  • ஐயோ! என் பேரைக் கெடுக்காதேடா! என் குடியை அழிக்காதேடா-' என்று உளறிக் கொண்டே, திமிறிக்கொண்டு ஓடினாள். கொஞ்ச தாரம்போய் திரும்பிப் பார்த்தாள். முகத்தில் பயந்தான்; வெறுப்பு இல்லை. என் சிரிப்பு எதிரொலித்தது. மறுபடியும்