பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@a)#『。 学s 『Te 135 அவன் மனசு வைத்தால் என்னதான் முடியாது? ஆனால் இப்போது, அப்போது, எப்போதும் மனம் வைப்பவன் அவனா? நானா? மனஸ்(ஆண்) மனளா(பெண்?) மானஸா(பெண்?) மான வி(பெண்?) சேவலைச் சுற்றிப் பெட்டைகள். ஒன்றைச் சுற்றி ஒன்பது "கொக்கரக்கோ' என்ன வெண்மை, என்ன சுத்தம்!! என்ன வெற்றி!!! கொண்டையும் கழுத்தைச் சுற்றி செதில்களும். என்ன சிலிர்ப்பு! என்கூவலே என் கொடி. உடல் ஆணாய் இருக்கலாம். ஆனால் மனம் பெண்ணாய் இருக்கலாம் அல்லவா? உடல் பெண்ணாய் இருக்கலாம். ஆனால் மனம் ஆனாய் இருக்கலாம் அல்லவா? இல்லை. மனம் அவ்வப்போது மாறி மாறி அந்தக்க சமயத்திற்கேற்ப ஆண்-பெண் அர்த்தகாரீசம். நீயே நான். நானே நீ. - நித்திரை நிலையில் கான் ஆனா? பெண்ணா? வெறும் நான். ஒரே நான். இன்று படுக்கப் போகுமுன் வனத்தை உறுதிப் படுத்திக் கொள்ள, வானம் பார்க்க மறந்ததால், வயிறும் வெறும் வயிறு ஆனதால், ஜன்மேதி ஜன்மமாய், ஆனால் ஜன்மாவுக்கே புரியாமல், அதன் அடி உணர்வின் அடிப் பயத்தில்,