பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 இம்பீ பிள்ளைத் தனத்தைக் கேட்டுக் கொள்ள வென்றே வந்த அவமானம்தான் உறுத்துகிறது. வேலை கேட்க வந்து விட்டு இந்தச் சூடு சொ ரணையெல்லாம், என்று போமோ, அன்றுதான் கொஞ்சமேனும் விடிவு காணலாம். சம்பந்தா சம்பந்தமில்லாமல், சாருவின் உருவம் என் முன் எழுந்தது. பாவம் சாரு தாலிச் சரட்டில் பொட்டு ஒன்றுதான் இருக்கிறது. வரும்போது, முழுச்சீருடன்தான் வந்தாள். ஒரு குறைச்சல் இல்லை. கொஞ்சமாயும் கொண்டுவரவில்லை. “Speak up man, I haven't all the day for you?” எழுந்தேன். 'Sit down! நான் உங்களை இன்னும் போகச் சொல்ல வில்லை.” Buzzi ஆள் தோன்றியதும் "மத்தவங்களைப் போகச்சொல் vacancy fied up." என்னது? என் தொப்புளிலிருந்து தொண்டைக்கு ஒரு சிட்டுக்குருவி ஒரு தாவு தாவிற்று. தங்க வால் குருவி. நாக்கு நுனிக்கு வந்துவிட்ட கேள்வியை கல்லவேளை அப்ப டியே விழுங்கிவிட்டேன். தொண்டையில் அடைத்தது. அவசரப்படக் கூடாது. இது ஏதோ எலியுடன் பூனை விளையாட்டு, பெரிய மனுஷாள் விளையாட்டு: “வேலையா? உங்களுக்கா? உங்களுகென்று யார் சொன்னது' என்று கேட்டு விட்டால் மூஞ்சியை எங்கே வைத்துக் கொள்வேன்? அடுத்து அந்த ஆள் எங்கள் எதிரே இரண்டு coke, straw:வுடன் வைத்துவிட்டு மறைந்தான். ஒன்றும் புரியல்லே. இதென்ன நெருப்பில் சுட்டு கெய்யில் வ்தக்கல்: நான் பொரிகிறேன்; அவன் மணத்துக்கு.