பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச், ர்ர். 1?? ஆனால் ஆபீஸ் போகிறவன் ஆபீஸ் போயாக வேண்டும். காலேஜ் போகிறவன் காலேஜ் போயாகவேண்டும். அப்பாவுக்கென்ன, ரிடையர் ஆகியாச்சு. ஈளிசேரில் சாய்ந்தபடி- மடியில் கவிழ்ந்த ஒர் புத்தகம். மண்டோப கிஷத், கடோபநிஷத், கீதை, அரபிந்தோவின் சாவித்திரி அல்லது பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் - அத்தனையும் கம் மண்டைக்கு அப்பாற்பட்ட சமாச்சாரம்-எதிரே சுவரில் பாட்டி படம் அந்தப் பெரிசு இப்போ அப்பாவைப் பண்ண இயலாது-அதைப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்து விடுவார். எதுபற்றி பாட்டியைப் பற்றித்தானிருக்கும். ஒரே பிள்ளை. இருக்கும்வரை இவரைப்பற்றி அவள் அவளைப்பற்றி இவர். அவள் போனபின் அவளைப் பற்றியே இவர். தாலம் முறிந்து 'இதோ பார் பெண்ணரசி, (அம்மா பெயர் அது வல்ல) துாலத்தைப் பார், கதவைப் பார் என்று என்னைக் கொத்திப் பிடுங்காதே. பிள்ளைகளைக் கேள். அவர்கள் தலையெடுத்தாச்சு. அவர்கள் போகிற தோரணையை, செலவு, ஆடம்பரம் எல்லாவிதத்திலும் பார்த்தால், அவர் கள் காலையும் பூமியிலிருந்து எடுத்தாச்சு என் காலம் ஒய்ஞ்சுபோயாச்சு, இனி என்னால் முடிந்தது பிறத்தியா ருக்கு என்னால் செலவையும் அசெளகரியத்தையும் எவ்வளவு தாரம் குறைத்துக் கொள்ள முடியுமோ...' வாக்கியம் முடிவு பெறாது, படிப்படியாக அடங்கும் மூச்சுப் போல் ஒய்ந்துவிடும். அப்படி ஒரு சமயத்தில் பாணி. . այո,-12