பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@)的。夺。f矿。 185 சொன்னால் உங்களுககு என்ன புரியப் போகிறது; அதுவும் வாஸ்தவம்தான். - அபூர்வமாக ஒரு நாள் மாலை அப்பா உலாவப் போய் சுருக்கவே திரும்பிவிட்டார். நெற்றிப் பொட்டிலிருந்து ரத்தம் கொட்டியவண்ணமிருந்தது. கன்னம் வழி, தோளில் சொட்டி மார்பில் கிளை பிரிந்து- என்னவாச்சு? எங்கள் பதறலுக்கு மன்னன் வாய்திறந்தால்தானே! மார்பில் வழியும் குருதிமேல் குனிந்த கண்களில் ஏதோ திகைப்பு. சிக்தனை. லேசான புன்முறுவல். இது என் ஜீவநதி! பார்த்தவர்கள் பின்னர் சொன்னார்கள், அப்பா நடந்து சென்ற வழியில் நாலு பையன்கள் பாம்பை அடித்துக் கொண்டிருந்தார்களாம். பாம்பு தலை குதறிப்போயும், பையன்கள் அடிப்பதை விடவில்லை. அப்பாவுக்குப் பொறுக்கவில்லை. துரத்திக் கொண்டு போயிருக்கிறார். மூன்று பேர்கள் ஓடி விட்டனர். ஒருவன் மட்டும் மாட்டிக் கொண்டான். அவன் பற்கள் கடகடக்க அப்பா அவன் தோள்களைப் பற்றிக் குலுக்கியதும் அவன் திமீறித் தப்பித்து ஓடிப்போய் வாயில் வந்தபடி வைது கொண்டு ஒரு கல்லைப் பொறுக்கி அப்பாமேல் விசியிருக்கிறான். அப்பாவுக்கு வரவர எந்த வலியும், வலிதரும் பிறரின் பிறரின் செயலுமே பொறுக்கவில்லை. புறவலியெல்லாம் அவருடைய அகவலியாக மாறின. இப்படியும் உண்டோ? அப்பா மகான் ஆகிக்கொண்டிருந்தாரா? உலகத்தையே மகா மயானமாகக் கண்டாரா? அல்லது வயதாகி விட்டாலே இப்படி ஒரு கட்டம் வருமா? அல்லது அப்பா புத்தி கழுவல்ஸ்? அப்பாவோடு வாழ்வது சுலபமில்லை. தூலம் முறிந்து ஃபேன் அப்பா மேல் விழுந்து-அந்த சப்தமே போதும் எல்லோரையும் எழுப்பிவிட-சுற்றிக்