பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?32 .ரா بی بی ff (5) மெனும் நெருப்பில் அவளைக் காப்பாற்றிக்கொண்டிருக் கிறது. அப்போது ஊசி முனை அவள் தவ உலகத்தையே தாங்குமெனில், நம் கவலைகள் எவ்வளவு அற்பம்? அவளிடம் கொண்டு போய் வைப்பதற்கே லாயக்கில்லை. மறுநாள் ஆபீசிலிருந்து பாஸ்கர் திரும்புகையில் ரேணு வாசலில் காத்திருந்தாள். வாசற்கதவு பூட்டியிருந்த சாவியை அவரிடம் கொடுத்தாள். இதுவும் அவர் களிடையே புதுசு.

வாங்கோ போகலாம்.'

- - w م. ی... نامه له : எங்கே? ஏன்? கேட்க மாட்டார். இருவரும் கடந்தனர். யாரேனும் கவனித்திருக்கிறீர்களா? சில சமயங்களில் பார்வைக்கு ஒரு திடீர் பளிங்கு ஏற்படுகிறது. அல்லது அப் படித் தோன்றுகிறது. அதில் அதுவரை பலகால விஷயாதி கள் ஒரு புது பரிமாண அர்த்தத்தை, தோற்றத்தைக்கூட அடைகின்றன. ஆச்சர்யமாயில்லை? இதுவரை எப்படி இதற்கு நான் குருடாக இருக்தேன்? இவள் முகத்தில் எப்படி இயற்கையே துடைத்து விட்டாற்போல் இந்த அதிசுத்தம்? அவள் கூந்தலைக் கொண்டையிட்டுக் கொண்டிருந்தாள். பொய்க்கொண்டை போட்டிருந்தமாதிரி கூந்தலின் நிஜம். இப்படியே கடந்து கொண்டேயிருக்கலாமா? அவர்கள்மேல் இறங்கிய ஏதோ ஒரு அமைதியின் சிற கணைப்பில் இருவரும் பேசவில்லை. ரேனு மெதுவாகத் தான் நடந்தாள், இரு சாரிகளையும் பார்த்துக் கொண்டு. சட்டை உரித்தாற்போன்று உடல்வாகில் அடக்கிய