பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பார்க்கவி மார்த்துடிப்பு பட்டுன்னு கின்னு போச்சாம். எவ்வளவு பணம் கட்டியிருந்தாரோ? யார் யார் பணத்தையெல்லாம் கட்டியிருந்தாரோ? கடைசியில் மனுஷனுக்கு என்ன அவ மானமான முடிவு! இப்படியெல்லாம் மனசு எண்ணறதே தவிர, ஐயோ போயிட்டாரே அநியாயமா என்ற உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு எழமாட்டேன் என்கிறது. எல்லாம் கியாயமாய்த்தான் போயிருக்கான்னுகூட .ெ ஞ் சு, கெஞ்சுக்கு ரகஸ்யமா உண்மையை வெளியிடறது. கிழவியைப் பார்த்தால்தான் பரிதாபமாயிருக்கு. நல்லதோ கெட்டதோ, ஒரே பிள்ளை. அவன், கைக் கொள்ளியை வாங்கிக்க அவருக்குக் கொடுப்பனையில்லை. ஆனால் அம்மா கூட அதிகம் அமுவில்லை. அம்மா தைரியம் அசாத்தியம். பழைய காலத்து ராஜபுத்ர ஸ்திரிகளைச் சேர்ந்திருக்க வேண்டும். அதென்னவோ தெரியல்லே. கஷ்டத்தில் அவர் கெற்றியில் தேஜஸ் விளையாடற மாதிரி அவளுக்குத் தோணறது. இப்போ ஒரு சந்தேகம் தோணறது. என் ஆம்படை யானைப்பற்றி கான் கினைக்கிறப்போ அவர்னு கினைக் கிறேனோ, அவன்னு கினைக்கிறேனா, அதுன்னு கினைக் கிறேனா? எதுவாயிருந்தால் என்ன? இனிமேல் எது எப்படிப் போனால் என்ன? செத்தமாட்டுமேலே எது ஏறினால் என்ன? என்னமோ உயிரோடு இருக்கிற மாதிரி தோணறதே யொழிய நிஜமாகவே கான் உயிரோடிருக் கேனா இல்லியோ? இதை எனக்கு கிச்சயமாச் சொல்ல பாரிருக்கா? 'கான் இருக்கிறேன்-!' அவள் திடுக்கிட்டுப் போனாள். அது அம்மா குரல் இல்லை.