பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 புற்று பறக்குமுன், புறங்காலில் அடி விழுந்துவிட்டது. ஒரு துள்ளுத்துள்ளிப் பத்தடிதாரம் அப்பால் போய்விழுந்தான். வயலில் அறுத்து விட்டிருந்த கதிர்களின் முளைகள் உடல் முழுவதும் முள்ளாய்க் குத்தின. அவன் மிதித்த விடத்தி லிருந்து புஸ் ஸென ஒரு சீறல்! அவ்வளவுதான். விஷயம் மிஞ்சிவிட்ட தென்று உணர்ந்தான். ஆனால் சமயபுத்தி ஓடிவிடவில்லை. அவசர் அவசர மாய்ச் சட்டைப் பையில் தேடினான். விஷம் கிர் ரென்று ஏறிக்கொண்டு வந்தது. எப்பொழுதும் கையுடன் இருக்கும் பேனாக்கத்தி இன்று ரயில்வே ஸ்டேஷனில் விட்டிருக்கும் கைப்பெட்டியில் மாட்டிக் கொண்டு விட்டது. உள்ளே நம்பிக்கைச் சுவரில் நாலு கற்கள் இடிந்தன. இருந்தும் சுடுமையான சந்தர்ப்பங்களிலே உழன்று பழகியதால், அவ்வளவு சீக்கிரம் தன்னைத்தான் கைவிடத் தோன்றவில்லை. மறுபடியும் பைகளில் தீப்பெட்டியைத் தேடினான். கடித்தவிடத்தைச் சுட்டு எரித்து விடலாம் என்று ஒரு எண்ணம். சிகரெட் பெட்டியிலிருந்து சிகரெட்டுகள் அந்தி யிருட்டில் வெண்மையாய்ச் சிதறின. தீப்பெட்டியில் ஒரே ஒரு குச்சி தான் இருந்தது. சபித்துக்கொண்டு இரு முறைகள் கிழித்தான்; இரண்டு பொறிகள் தாம் தெறித்தன. சுடர் உடனே குதிக்கவில்லை. மருந்து கிழிப்பதிலேயே உதிர்ந்து விட்டது. உள் சுவர் தரை மட்டமாய் இடிந்தது. ஒடிப்போய் ஊரையும் பிடிக்க முடியாது; ரயிலடிக்கும் திரும்ப முடியாது. சம தாரத்தில், இரண்டுக்கும் வெகு தூரத்தில் மாட்டிக் கொண்டோம் எனக் கண்டு கொண்டான். விஷம் ஏறிக் கொண்டே வருகிறது. "எங்கே யிருக்கிறோம்?'-சுற்று முற்றும் நோக் கினான்,