பக்கம்:புலவராற்றுப்படை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இவரென்பதனைக் கற்றவரினுங்கூட்டுக. வகையிற்றென்னும் வினைக் குறிப்பு இனி வரும் காலத்தென்பதனோடு முடிந்தது. இன்றென்பதனை அசைநிலையாக்கி, வகையாகியெனக் கோடலு மொன்று.

கண் இல் மாக்கள் முன்னர் எண்பட - பார்வையில்லாத மனிதர்முன்னே இரண்டு மொன்றேயென் றெண்ணிக்கைப்பட,

பார்வையைக் கண்ணென்ரும்; அஃது ஆகுபெயர். கிளந்த் வல்ல’’ என்பது தொல்காப்பியம். ஈண்டுப் பார்வையென்றது இரத்தின பரிக்கை காண்டலை,

இயல் மணி நிரை இல் செயல் மணி விராஅய் கிடந்து இமைத்து ஆங்கு - இயற்கைரத்தின நிரையிற் செயற்கைரத்தினங் கலந்து கிடந்து பிரகாசித்தாற்போல,

இயன்மணி - சாதிரத்தினம். செயன்மணி - காய்ச்சுகல்.

மடம் திகழ்பவர் முன் இருவரும் தகைமை இன் ஒருவர் என கலாவி - மடமை விளங்குவோர் முன்னே அக்கற்ருர் கல்லா ரென்னும் இருவரும் தகுதிக்கண் ஒருதன்மையரே யென்று சொல் லும்படி கலந்து, -

அறியார் என்ன பெரும் சுட்டு உறீஇ - இவர்கள் அறியாதா ரென்று சொல்லப்படாமற் பெரிதுஞ் சுட்டப்படுதலைப் பொருந்தி,

போலி புலமையர் திரியும் இக்காலத்து - போலிப்புலவர்கள் திரியா நிற்கு மிந்தக்காலத்தில்,

. புனே நூல் உணரா அனையர் ஆன் உம் - அலங்கரிக்கப்பட்ட

நூல்களைக் கற்றுணராத அத்தன்மையராலும்,

நறவு ஓர் வாழ்க்கை பறவை இன் விழை.இ அரும் கலே பல: உம் ஒருங்கு உடன் துரீஇ நன்மை இல் பயிலுநர் இன்மை ஆன் உம் - தேனத் தேர்ந்து வாழ்தலையுடைய வண்டுபோல விரும்பி அரிய கலைகள் பலவற்றையு மொருங்கடையத் தேடி நன்மையிலே கற்போரில்லாமையாலும், -

பயிலுநர் சிலர் ஏ ஆகி பயில் உழி புரத்தல் மாலேயர் கரத்தல் ஆன் உம் - அங்ங்னங் கற்பார் சிலரேயாய்க் கற்கு மிடத்துக் கற்பாரைக் காக்கு மியல்பினையுடையார் காவாதொளி த்தலானும்,

23