பக்கம்:புலவராற்றுப்படை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணியனென்னுங் குறிப்புமுற்றுப் பெயரெச்சமாய் நின் றிது .

கேட்டனென் - நான் கேள்விப்பட்டேன் ;

அன்றே என் கவற்சி கெட்டது - கேட்டவப்பொழுதே என் கவலை யொழிந்தது;

வேட்டன அடைதல் விளிவு உருது ஆல் என - நாம் விரும் பினவற்றையடைதல் கெடுதலுருதென்றெண்ணி, -

ஆல் - அசை.

கதுமென எழுஉ - விரைந்தெழுந்து,

சினை கொள் புதுமலர் - கொம்புகள் தம்மிடத்துக்கொண்ட புதிய பூக்கள்,

வண்டும் தேனும் உண்டன களிப்ப - ஆண்வண்டும் பெண் வண்டு முண்டுகளிப்படைய,

உண்டனவென்னும் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.

நற விருந்து அளிக்கும் புறவு உழ்ற சோலை - தேனே

விருந்தாகக் கொடுக்கின்ற காட்டோடு மாறுபட்ட சோலைகளே யுடைய,

நற - குறியதன்கீழாக் குறுகியது.

வளன் அறவு அறியா மல்லல் அ முது நகர் மாண்பு உற புசு உ - செல்வமறுதலையறியாத வளமுள்ள அந்த மதுரையென் கிற முதிய பட்டணத்தில் மாட்சிமைப்படச் சென்று,

காண்பன கண்டு - அங்கே காணத்தகுவனவற்றைக் கண்டு,

செந்தமிழ் விளங்கும் அ. சங்கம் போஒய் - செவ்விய தமிழ் விளங்குகின்ற அந்தச் சங்கத்திற் போய், -

ஈண்டுச் சங்கமென்றது அதன் சாலையை.

நல் இசை புலவர் சொல் இசை பர்ப்ப കുഞ്ഞു இனிது இருக்கும் அவை களம் குறுகி - நல்ல புகழையுடைய அச்சங்கத்துப்

28

28