பக்கம்:புலவராற்றுப்படை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ வயின் போந்து - அந்தவிடத்திற் போய்,

கூர் அயில் ஏந்திய முடி உடை வழுதியர் முறை வழி இருந்த கொடி நுடங்கு எயில் இன் கோயில் மறுகு உம் - கூரிய அயிற் படையைக் கையிலேந்தின முடியையுடைய பாண்டியர்கள் செங் கோன்முறைவழியே அரசாண்டிருந்த கொடிகளசைகின்ற அரணை யுடைய அரமனைவிதியையும்,

ஆலயம் வீதி உம் - தேவாலய வீதிகளையும்,

ஆவணம் வீதி உம் - கடைவீதிகளையும்,

அறிந்தவர் வியக்கும் ஆண்மையர் மலிந்து செறிந்து அமர் தெருவும் - பலதொழில்களையும் அறிந்தோர் வியக்கின்ற ஆண் மையினையுடையார் மிகுத்துச் செறிந்து தங்கின. பலவேறு வகைப் பட்ட வீதிகளையும், r

திரு ஒடு உம் காண்பிர் - செல்வத்தோடே காண்பீர் ;

உம் - அசை.

கண்டனிர் பின்றை - கண்ட பின்னர்,

கண்டனிரென்னும் வினைமுற்றுப் பெயரெச்சமாய் நின்றது.

திண் திறல் புலவர் கூடு உறு சங்கம் நாடினிர் செலின் ஏ - திண்ணிய திறலையுடைய புலவர்கள் கூடுதலுற்ற சங்கத்தை நாடிச்

சென்றல்,

கூட்டு - முதனிலைத்தொழிற்பெயர். ஏ - அசை,

ஆயிரம் கதிர் கொள். பருதி ஞாயிறு திருந்து வரை சிரகம் மீமிசை இரு என - ஆயிரங்கதிர்களைக் கொண்ட வட்டமாகிய ஞாயிறு திருந்தின அச்சிகரத்தின்மேலே இருந்தாற்போல,

- ನಿಣ5.- ஒருபொருளிருசொல்.

கரும் பனை கை இன் வேழத்து ஒரு வெரிந் - கரிய பனையைப் போன்ற கைகளையுடைய யானையின் ஒப்பற்ற முதுகில்,

அரசனையாகலின் ஒப்பற்ற முதுகென்றம்.

31.

31