பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


1

மனம்‌ கமழ்‌ தமிழ்‌

பேரறிஞர்கள்‌ தேவநேயப்‌ பாவாணர்‌ அவர்‌களம்‌ ஒளவை துரைசாமி பிள்ளை அவர்களும்‌ ஒரு சமயம்‌, பாவேந்தர்‌ பாரதிதாசனைக்‌ காணச்‌ சென்றார்கள்‌.

அப்போது அவர்கள்‌ இருவரையும்‌. பார்த்ததும்‌ பாவேந்தர்‌ பலமாக மூக்கை உறிஞ்சினார்‌. அதக்‌ கண்ட பாவாணர்‌, . **உடலுக்கு. என்ன?” என்று கேட்டார்‌.

“உடல்‌ நலமாகத்தான்‌ இருக்கிறது. உங்கள்‌. இருவரையும்‌ காணும்போது, தமிழ்மணம்‌ கமழுது”* என்றார்‌ பாவேந்தர்‌.

2 மன்னரிடம்‌ உள்ள கோடி

நம்‌ இந்திய நாடு விடுதலை பெறுவதத்கு முன்னர்‌, இந்தியாவில்‌ இருந்த சமஸ்தான மன்னர்‌. கள்‌ அனைவரும்‌, டில்லியில்‌ ஒரு மாநர்டு நடத்தி னார்கள்‌.

அதில்‌ என்னர்கள்‌ ஒவ்வொருவரும்‌ தங்களிடம்‌. இத்தனை கோடி பணம்‌ இருக்கிறது என்பதைப்‌ பெருமையாகச்‌ சொன்னார்கள்‌.