பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்


அதை அறிந்ததும், "ஆமாம், அவர் சொன்ன இடத்தில், விரைவாகப் பூசுங்கள்’ என்றார் வந்தி

ருந்த புலவர்.

'உண்ட இடம் என்பது, சாப்பிட்ட இடம் என்பதோடு, சாப்பிட்ட வாயையும் குறிக்கும். சொன்ன இடம் என்பது, அவர் குறிப்பிட்ட இடம் என்பதோடு, அவர் வாயையும் குறிக்கும்.

அனுபவம் எளிதாகி விடும்

ஒரு செல்வர், தம்முடைய சாதகத்தை சோதிட ரிடம் காண்பித்தார்.

சாதகத்தைப் பார்த்த சோதிடர், ! உங்களுக்கு இப்பொழுது ஏழரை நாட்டுச் சனி தொடங்கியிருக் கிறது; அதனால் மூன்றரை ஆண்டுகள் மிகுந்த துன்பத்தையும், தொல்லையையும் கொடுக்கும்’ என்றார்.

சாதகம் பார்க்க வந்தவர், ஏழரை நாட்டுச் சனி பிடித்தால், ஏழரை ஆண்டுகள் என்று கூறுவார் கள்; நீர் மூன்றரை ஆண்டுகள் என்று கூறுவதன் காரணம் என்ன?’ என்றார்.

அப்போது, அங்கே வந்த புலவர் அதை

அறிந்து, ஏழரை மூன்றரை அல்லவா? சோதிடர் அந்தக் கணக்கில் கூறுகிறார்’ என்றார்.