பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

முல்லை பிஎல். முத்தையா - 夏灵

அதைக் கேட்டதும் புலவர், நான் தலைவர் அவர்களைவிடக் குறைவாகத்தான் படித்தேன். ஆயினும் நான் அவர்களுடன் கூடிப்படித்தேன் என்பதால், கூடப்படித்தவன்” என்று கூறினார்கள்; என்னிடம் கொண்டுள்ள அன்பின் மிகுதியால், அவ்வாறு கூறினார்கள். நான் அவர்களைவிட குறைவாகப் படித்தவனே! என்றார்.

(கூடிப்படித்தல்-சேர்ந்திருந்து படித்தல். கூடப் படித்தல் மிகுதியாகப் படித்தல்.)

  • {}

பசுவை ஓட்டிச்செல்

கோவிந்தன் என்னும் அரசு அலுவலர் ஒருவர் வசித்து வந்தார். அவருடைய வீட்டிற்கு அடுத்த வீட்டில் புலவர் ஒருவர் இருந்தார். இருவருக்கும் சிறுபகை. பேசுவதில்லை.

ஒருநாள், அலுவலர் கோவிந்தனுடைய 盟j岳。 புலவருடைய தோட்டத்தில் புகுந்து மேய்ந்தது.

புலவர் அதைப் பிடித்துக் கட்டி வைத்தார். கோவிந்தனுடைய வேலையாள் பசுவை ஒட்டிவரச் சென்றபோது,புலவர் அதைவிட மறுத்து விட்டார்.

சிறிது நேரத்திற்குப்பின், பசுவை அவிழ்த்துக் கொண்டு கோவிந்தன் வீட்டு வாசலுக்குச் சென்று, கோவிந்தா, கோவிந்தா' என்று கூப்பிட்டாள் புலவர்.