பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்


எதிர் வீட்டுக்காரர்கள், அரசு அலுவலரை, புலவர் பெயர் சொல்லி கூப்பிடலாமா?’ என்றனர். 'நான் அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட

வில்ல்ையே!”

கோ - பசு, இந்தா - ஒட்டிச் செல்’’ என்று தானே சொன்னேன். இதில் என்ன தவறு?’’ என்றார். *

எதிர் வீட்டாரும், கோவிந்தனும் புலவருடைய அறிவுத் திறனைப் பாராட்டினர்.

  • * எல்லோருக்கும் படி அளப்பவர் தஞ்சை மாவட்டத்தில், பாடல்பெற்ற ஒரு கோயிலுக்கு, பண்டிதமணி கதிரேசன் செட்டியாரும் பேரறிஞர் வேங்கடசாமி நாட்டாரும் சென்று கொண்டிருந்தனர்.

அந்தக் கோயிலின் வ | ச ற் ப டி க ள் சில உடைந்து காணப்பட்டன. அதைச் குறித்து, "படி இல்லை, படிஇல்லை (அதாவது படிக்கட்டு இல்லை; பார்த்து நடக்க வேண்டும் என்ற கருத்தில்) கூறினார் நாட்டார் அவர்கள்.

"எல்லோருக்கும் படி அளந்து கொண்டிருக்கும் இறைவனின் கோயிலில் படி இல்லை என்று சொல் கிறீர்கள்!' என்று சொன்னார் பண்டிதமணி.

(வாயிற்படி என்றும், உண்பதற்கு படி அளிப்ப தும் பொருளாகும்)