பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

முல்லை பிஎல். முத்தையா #3

அதற்காக புலவருக்கு, மாசம் பத்து ரூபாய் அளித்தார் செல்வர்.

அந்தத் தொகை அப்போதைய நிலையில், புலவருக்கு மிகுந்த உதவியாக இருந்தது.

புலவரின் நண்பர் ஒருவர், 'உமக்கு என்ன கிடைக்கிறது?’ என்று அவரிடம் கேட்டார். - - அதற்குப் புலவர், மாசம்பத்து' என பதில் அளித்தார்.

(மா சம்பத்து-பெரிய செல்வம்; மாசம் பத்து)

என்னையே பார்த்தாய்! ஒரு புலவரின் மனைவி கற்பு நெறி உடையவர். தன் கணவரிடம் அன்பும் பக்தியும் கொண்டவர். கோயிலில் இறைவனை வணங்கினாலும்கூட தன் கணவனையே நினைத்து வணங்கக் கூடியவள். ஒருநாள் கோயிலுக்குச் சென்று வந்தவள், தன் கணவனிடம் நான் கோயிலில் என்ன பார்த்தேன், தெரியுமா?’’ என்று நகைச்சுவை ததும்பக் கேட்டாள். -

  • புலவர், என்னோக்கினை என்று கூறினார். "நான் உங்களைக் கேட்டால், நீங்கள் என்ன பார்த்தாய்? என்று என்னையே கேட்கிறீர்களே!' என்றாள் அவள். - -

புலவர், 'என்னோக்கினை! என்றால், கோயி லில் இறைவன் உருவத்திலும் என்னையே பார்த் தாய்’ என்று பொருள் விளக்கினார்.