பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்



霍领 ஆராய்ந்த கைகளும், தேடிய கால்களும்

தணிகைமணி டாக்டர் செங்கல்வராய பிள்ளை அவர்கள், தேவாரங்களையும், திருப்புகழையும் ஆராய்ந்து, ஒளிநெறிகள் என்னும் தலைப்பில் வெளியிட்டுப் பெருமை பெற்றவர்.

ஒவ்வோர் ஆண்டும், தமிழ் தாத்தா டாக்டர் உ.வே. சாமி நாதய்யர் அவர்களை, தணிகைமணி சென்று காண்பது வழக்கம். -

அய்யர் அவர்கள் நோயுற்றுப் படுத்திருந்தார். அவர் அருகில் சென்று. அவர் விழிக்கும் வரை நின்று கொண்டிருந்தார். o:

அய்யர் கண் விழித்துப் பார்த்ததும், மகிழ்ச்சி ததும்ப, "திருப்புகழை ஆராய்ச்சி செய்த கைகள் ஆயிற்றே" என்று கூறி, தணிகைமணியின் இரு கைகளையும் பற்றி, தம் கண்களில் ஒற்றிக் கொண்டாள். .

உடனே தணிகைமணி, அய்யரின் பாதங்களைப் பற்றியவாறு 'சங்கத் தமிழ் ஏடுகளைத் தேடின. கால்கள் ஆயிற்றே இவை’ என்று கூறி வணங்கி

鑫了藉“荔”。

அறிஞர்களின் பெருமையை ೨15ಟ್ರfಹಡಿಗ அறிவர்.