பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

24 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

மாணவன் இரண்டு பெண்களை அழைத்து வந்து, இவர்கள் களவாட மாட்டார்கள்; கற்புடை யார்’ என்று கூறினான்.

மாணவனைப் பார்த்து, இவர்கள் கற்புடை யார்கள் என்றால் அனுப்பிவிடு; இவர்களை ஏன் அழைத்து வந்தாய்? என்று கூறினார் புலவர். - மாணவன் திடுக்கிட்டு, 'கல் புடைப்பதற்கு அழைத்து வரச் சொன்னீர்களே? இப்போது வேண் டாம் என்கிறீர்களே?’’ என்றான். .

    • ஆம். நான் கல் புடைப்பதற்கு அழைத்துவரச் சொன்னேன், நீயோ இவர்கள் கற்புடையார்’ என்கிறாயே! கல்புடையார்கள் என்றால், பிறகு ஏன்? கல் புடைப்பவர்களாகப் பார்த்து, அழைத்து வா’ என்றார் புலவர். புலவரின் நகைச்சுவையை மாணவன் பெரிதும் ரசித்தான்.

(கல்புடையார் - கற் புடையார், கற்களை புடையாதவர்). -

2 : இரண்டிலும் இரட்டியே! இரட்டியார் என்ற இனத்தைச் சேர்ந்த புலவர் ஒருவர் பரிசு பெறுவதற்காக, சில பாடல்களை இயற்றிக் கொண்டு, ஒரு ஆதீனத் தலைவரைக் காணச் சென்றார்.

அந்தப் பாடலில் తాలి இடத்தில், தம்மை 'அரசன்' என்று குறிப்பிட்டிருந்தார். -