பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்


புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

24 அவர் குறட்டை விடவில்லையே!

புலவர் ஒருவர் தமது வீட்டுத் திண்ணையில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.

புலவரைக் காணவந்த அவருடைய நண்பர், என்ன, இப்படிக் குறட்டைவிட்டுத் தூங்குகிறீர் கள் கேலி செய்ய மாட்டார்களா?"" என்று கேட்டார்.

புலவர், என்ன இப்படி சொல்கிறீர்கள்? நான் எங்கே குறட்டை விட்டுத் தூங்கினேன் என்றார். -- *

நீங்கள் குறட்டை விட்டுத் - தூங்குவது உங்களுக்கு எப்படி தெரியும்? பிறர் சொன்னபோதி லும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என் றார் நண்பர்.

உங்கள் கண்முன்னே, நான் குறட்டில் படுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்க வில்லையா? என்றார் புலவர்,

அதன் பின்னரே, குறட்டை என்பதை திண்ணை என்று பொருள் கற்பித்துக் கொண்டு, நகைச்சுவை யாகப் பேசுகிறார் புலவர் என்னும் செய்தி நண்பருக்குத் தெரியவந்தது. .

(குறடு என்பது, திண்ணையையும் குறிக்கும். தூங்கும்போது சிலர் குறட்டை விடுவதும் உண்டு, அது ஒருவித சப்தம்-ஒலி,)