பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்


Ti: வீடு, அடுத்த தெருவில் உள்ள கோடி வீடு' என்றார் அவர்.

. 'உங்களுடைய கோடி வீட்டுக்கு நான் எப்படி வரப்போறேன்.வருவது சந்தேகம் தான்’ என்றார். கோடி வீடு' என்றால், கடைசி வீடாகும். கோடிக் கணக்கான வீடு' என்னும் பொருளில் புலவர் நகைச்சுவையை உதிர்த்தார்.

32 முதல் தரம் - குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா, ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அந்த நண்பர், கவிஞரை வற்புறுத்தி அழைத்துச் சென்று, இலை யின்முன் உட்காரச் செய்து அருகில் இருந்து உபசரிக்க முற்பட்டார்.

உணவில் சிலவற்றை தவிர்த்து சிறிதளவே உண்டார் கவிஞர்.

கவிஞர் சரியாக உண்ணவில்லையே; உணவு நன்றாக இல்லையா?’ என்று கேட்டார் நண்பர்.

அதற்கு கவிஞர், உணவு முதல் தரம்; நான் இரண்டாம் தரம்” என்றார். .

( வீட்டில் சாப்பிட்டு விட்டேன்; இப்போது, இரண்டாவது தடவையாக இங்கே சாப்பிடுகிறேன், என்பதை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.)