பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

முல்லை பிஎல். முத்தையா 39

"பெண் காதில் அணிந்திருப்பது என்ன?” என்று கேட்டார் பேராசிரியர்.

'காதில் அணிந்திருப்பது கம்மல்!” என்றார்

"அதுதான் என் தொண்டையில் வந்திருக் கிறது! அதனால்தான் சரியாகப் பேச முடிய வில்லை என்றார் பேராசிரியர். . . . . . . . . . .

பேராசிரியரின் தொண்டை கம்மியிருப்பதை உணர்ந்தார் நண்பர்.

(காதணி, கம்மல், கடுக்கன், தோடு என பலவாறு கூறுவது உண்டு.)

38

அவன் கடையில் இருக்க வேண்டியவன்

மாணவர் கலைக் கழகத்தின் ஆண்டு விழா வுக்கு ஒரு புலவர் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார். .

விழா தொடங்குமுன், மாணவர்களிடம் பல கேள்விகளை கேட்டு, அவர்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து பார்த்தார் புலவர். -

அந்த மாணவர்களில் ஒருவன் மட்டும், புலவரின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் மக்காக இருந்தான். -

அவனைப் பார்த்து, 'நீ எந்த இனத்தைச் சேர்ந்தவன்?' என்று கேட்டார் புலவர். -