பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

முல்லை பிஎல். முத்தையா 45.

அப்படியானால் சரிதான், இருவரும் ஒரே நிலையில்தான் இருக்கின்றனர், இளையவன் பணம் இல்லாதவன்; பணத்துக்கு முடைப்படுகி றான். மூத்தவனோ பண முடையவன் இருவர் நிலையும் சரியாகத்தான் இருக்கிறது' என்றார் புலவர். - -

("பணமுடையவன்' என்பதற்கு, பணத்துக்கு

முடைப்படுகிறான். பணமுடை என்பதற்கு, பணத்

துக்கு தட்டுப்பாடு, நெருக்கடி என்ற பொருள்

- 44

இப்படி ஓர் மகிழ்ச்சியா?

சைவ சமயத்தில் பற்றுதல் மிகுதியாக உள்ள ஒரு புலவர். அவர் வைணவத்தில் மிகுந்த வெறுப்பு டையவர். வைணப் பெயரைக் கேட்க நேர்ந்தால், உடனே சிவ சிவா என்று கூறுவார்.

அந்தப் புலவரிடம் பாடம் கற்றுக் கொள்ள மாணவன் ஒருவன் வந்தான். அவனிடம், உன் பெயர் என்ன?" என்று கேட்டார். - -

"என் பெயர் சிவராமலிங்கம்' மாணவன்.

என்றான்

புலவர் மகிழ்ச்சிததும்ப, "அகப்பட்டுக் கொண் டான், அகப்பட்டுக் கொண்டான்' என்று உரக்கக் கூவினார்,

மாணவனுக்கு புலவரின் கூப்பாடு புரியவில்லை. அவரையே பார்த்தபடி நின்றான். - -