பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

முல்லை பிஎல். முத்தையா 59.

பாலில் துணியை நனைத்து, புலவர் வாயில் பிழிந்து வந்தான் மகன்.

ஒரு நாள் அவ்வாறு பாலைப் பிழியும் போது, புலவர் பாலை வெளியே துப்பி விட்டார்.

அதைப் பார்த்த மகன், "அப்பா பால் கசக் கிறதா?’ என்று கேட்டான்,

அப்பொழுது, புலவர், பாலும் கசக்கவில்லை. துணியும் கசக்க வில்லை’ என்றார்.

அழுக்கான, துணியை தினமும் கசக்க வேண்டும். அன்று துணியைக் கசக்கிக்காயவைக்க மறந்துவிட்டதை உணர்ந்தான் மகன்.

நோய் வாய்பட்டு, பேச இயலாமல், உணவை உண்ண முடியாமல் இருந்த நிலையில், புலவரின் நகைச்சுவை மறையவில்லை. .

ఖిళD

தலை விதிவசம்

தலையில் சிறு மூட்டை, முடிச்சுகளைச் சுமந்து கொண்டு ஒரு புலவர் தம் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். .

அதைப் பார்த்த அவர் நண்பர், “ుమGr, இது என்ன?’ என்று கேட்டார்.

"என் தலை விதிவசம்' என்று பதில் அளித் தார் புலவர்.