பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62 புலவர்கள் உதிர்த்த முத்துக்க ள் -

63 ஒரு வழிப்பாதை

இளம் புலவர் ஒருவருக்கு திருமணம் நடை பெற்றது. அதன்பின்,ஓர் ஆண்டு கழித்து, அவரைக் காணவந்தார் அவருடைய உறவினரான புலவர்.

இளம் புலவரிடம், 'மாமனார் விட்டாரின் போக்குவரத்து உண்டா?’ என விசாரித்தார் உறவினரான புலவர். -

அதற்கு, போக்கு உண்டு. இங்கிருந்து பொருள், பணம், துணிகள் போகும்; ஆனால், வரத்து எதுவும் அங்கிருந்து வந்தது இல்லை’ என்று கூறினார் இளம் புலவர்.

அப்போ, 'ஒரு வழிப்பாதை போலும்!” என்றார் உறவினரான புலவர். -

64

வண்ணாத்தி வந்தானா?

தம் அறையிலிருந்து, படித்துக் கொண்டிருந்த புலவர்; அப்போது 'வண்ணாத்தி' என்றார்.

அடுக்கனையிலிருந்த புலவரின் மனைவி, வண்ணாத்தி வந்திருக்கிறாள்' என்று நினைத்து, விரைவாக வந்தாள். 'வண்ணாத்தி எங்கே’’ என்று கேட்டாள் புலவரிடம். -