பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

முல்லை பிஎல். முத்தையர் 53

"வண்ணாத்தி வரவில்லையே!' என்றார் புலவர்.

"வண்ணத்தி என்று சொன்னீர்க்ளே’ என்னையா வண்ணாத்தி' என்று அழைத்தீர்கள்?’’ என்று கடுகடுத்தாள் மனைவி, -

"வண்ணாத்தி வந்தாளா என்று உன்னிடம் கேட்பதற்கு, வண்ணாத்தி’ என்று தொடங்கினேன் வந்தாளா என்று கேட்குமுன், நீ விரைவாக வந்து விட்டாய்' என்று கூறிச் சமாளித்தார் புலவர்.

をリ பொடிவைத்து நகை செய்தல்

ஒரு வீட்டில் பலர் கூடிப் பேசிக் கொண்டிருந் தனர். அவர்களில் பொற்கொல்லவர் ஒருவரும் புலவர் ஒருவரும் இருந்தனர்.

அவர்களில் ஒருவர், அடிக்கடி பொடி போடும் வழக்கம் உள்ளவர். பொடி போடாமல் அவரால் சிறிதுநேரம் கூட இருக்கவே முடியாது.

‘அவரை திண்டாடச் செய்ய நினைத்து, அவருடைய பொடி டப்பியை எடுத்துக் கையில் மறைத்துக் கொண்டார் பொற்கொல்லர்.

சிறிது நேரம் கழித்து, அவர் தம்முடைய பொடி டப்பியைக் காணாமல் திண்டாடினார். அதைப்பார்த்து தட்டார் நகைத்தார்.