பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

முல்லை பிஎல். முத்தையா 69

குடமுழுக்குச் செய்தால் ஊர் மக்களுக்கு நன்மை உண்டாகும் என்று கருதினர் சிலர். .

அதற்காக, af மக்களிடமும், பக்கத்து சிற்றுார் களிலும் நன்கொடை வசூலித்தனர் ஒருசிலர்.

ஒவ்வொருவரும் இயன்றதை (பத்து, இருபது, ஐம்பது என) நன்கொடை அளித்தனர். -

உள்ளுர் பிரமுகர் ஒருவர். ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்திருந்தார்.

நிதி வசூலித்தவர்கள், நன்கொடை அளித்த வர்களின் பெயர்களை எழுதி வைத்தனர். அதைக் கண்ட ஒருவர், "ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தவர், அவர் ஒருவரே! அவருடைய பெயரை முதலில் எழுதாமல் அடியில் - கடைசியில் எழுதி வைத்திருக்கிறீர்களே?’ என்று வருத்தத்தோடு சொன்னார். -

அப்போது, அங்கு இருந்த புலவர், 'ஆயிரம் ரூபாய் கொடுத்தவர் பெயர் அடியில் இருந்தால் என்ன? அவர் எல்லோரையும் தாங்கிக் கொண்டி ருக்கிறார்’ என்றார்.

குற்றமாகக் கருத வேண்டாம்

கொங்கு நாட்டுப் புலவர் ஒருவர் நூல் இயற்றி னார். அந்த நூலின் வெளியீட்டு விழா, தஞ்சை