பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள் அதைச் செவிமடுத்த புலவர் உடனே எழுந்து, ‘அரசே! அண்டங் காக்கப் பிறந்தவர் தாங்களே! நான் அல்லன்' என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

அரசன் கடுஞ்சினத்துடன் புலவரைப் பார்த் தான். அரசனின் சினக் குறிப்பை அறிந்த புலவர் உடனே எழுந்து, அரசே! சினம் கொள்ளற்க. அண்டத்தைக் காக்கப் பிறந்தவர் தாங்களே!’

அரசன் புலவரின் அறிவைப் பாராட்டி பரிசு அளித்தான். -

o (ஆண்டம் - உலகம், அண்டங் காக்கை கரிய நிறமுள்ளது)

- 3

தோட்டத்திலே ஆடு! புலவர் தம்முடைய வீட்டிலே ஒரு மாணவனுக் குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது, தோட்டத்திலே ஒரு ஆடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.

புலவர், மாணவனைப் பார்த்து, "தோட்டத் திலே ஆடு!’ என்றார்.

மாணவன் உடனே எழுந்துபோய், தோட்டத் தில் விளையாடத் தொடங்கினான்.

அரைமணி நேரமாகியும் மாணவன் திரும்பி வராமல் விளையாடிக் கொண்டிருப்பதை எட்டிப்