பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கம்பன் கலை நிலை

உலகம் கலமுற ைோ உதவி மேகம் வானில் உயர்ந்து கிற்றல் போல் உயிர்கள் இன்புற உதவியருள்பவர் சிறந்த பதவியை யடைந்து மேல் உயர்ந்து போவர் என்பது குறிப்பு.

மழைவளம் கூற வந்தவர் வள்ளல்களையும் இடைமருவி நம் உள்ளம் கொள்ளவைத்தார். இங்ாவனம் வைத்த இவர்க்கு முன் வைப்பாக இருந்ததையும் இங்கே அறிந்துகொள்ள வருகின்றாேம். அடியில் வருவன காண்க.

மழைபெய்தல் “ தேனிரைத்துயர் மொய்வரைச் சென்னியின்

மேனிரைத்து விசும்புற வெள்ளிவெண் கோல்நிாைத்தன போற் கொழுந்தாாைகள் வானிரைத்து மணங்து சொரிந்தவே.” -

(சிந்தாமணி, நாம, 4)

வெள்ளம் பரவல்.

“ வள்ளற் கைத்தல மாந்தரின் மால்வாைக்

கொள்ளே கொண்ட கொழுகிதிக் குப்பையை உள்ளம் இல்லவர்க் கூர்தொறும் உய்த்துராய் வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே. (சிந்தாமணி,நாம, 7)

புள்ளிமால்வளை, வெள்ளிவிழ், வள்ளியோர், காரைகள் எனக் கம்பர் வாக்கில் வந்துள்ள இவை சிக்காமணியிலிருந்து வந்தனவாம் என்பது மேற்குறிக்க இாண்டு கவிகளின்றும் கண்டு கொள்ளலாம். ஆயினும் அவற்றை மெருகு கொடுத்து, அழகு படுத்தி, மதுரமாக்கிக், தெளிவுறுத்தி, இனிமை கனிய, இன் னேசைபொலிய இவர் இசைத்திருக்கும் திறம் ஒதி நோக்கி உய்த்துனாவுள்ளது. எளிமை தெளிவு மென்மை கண்மை அழகு பெருமை நயம் நளினம் முதலிய நலங்கள் பலவும் இவர் கவியில் கலந்து ஒளிசெய்து கிற்கின்றன. உணர்ந்து உணர்ந்து உள்ளுற உவந்துகொள்ளும்படி இவரது கவிகள்உருவாகியுள்ளன.

உள்ளல் உவக்கல் வள்ளல் ஈகை என்னும் பகங்களில்

பதிந்துள்ள நயங்கள் விழைந்து வியந்துகொள்ளும் நிலையில் விளே ந்து வந்துள்ளமை காண்க, நயம் தெரியின் பயன் பெரிதாம்.