பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நதி நிலை 101

இங்கே கூறியதை கினைவில் வைத்துக்கொண்டு கிட்கிந்தா காண்டத்தில், கார்காலப்படலத்தில் இதற்கு இனமாக ஒன்றை இசைக்கிருக்கிரு.ர். ஏறக்குறைய 4360 பாடல்களுக்கு அப்பா

லுள்ள அக்கவியை இங்கே கவர்ந்து பார்ப்போம்.

மள்கலில் பெருங்கொடை மருவி மண்ணுளோர் உள்கிய பொருளெலாம் உதவி அற்றபோது எள்கலில் இரவலர்க்கு ஈவது இன்மையால் வெள்கிய மாந்தரின் வெளுத்த மேகமே.”

(கார்காலப்படலம் 104)

கார்காலம் கழிந்து குளிர்காலம் வந்தவுடன் மழைபெயல் ஒழிந்து வெண்ணிறமாய் மேகங்கள் வான் படர்ந்து கிற்கும் ஆதலால் அங்கிலையினை வருணித்த படி யிது. மள்கல்=குன்றல்.

உள்ள பொருளெல்லாம் பிறர்க்கு உதவிவிட்டுக் கையில் ஒன் அறும் இல்லாதிருக்கும்பொழுது தம்பால் வந்து கேட்பவர்க்குக் கொடுக்க முடியாமையால் உள்ளம் நாணி வள்ளல்கள் முகம் வெழுத்ததுபோல மேகங்கள் வெளுத்திருந்தன என்பதாம்.

நாணமும் கவலையும் மனத்தில் புகுந்தால் மானமுள்ள மனி தன் உடல் கிறமாறிப் படாடைய நேரும் ஆதலால் வெள்கிய மாங்கரின் வெளுத்த’ என்றார். அகநிலையால் புறநிலை புலப்

பட்டுள்ள இதில் மானச தத்துவம் காண்க.

கார்மேகங்கள் வள்ளல்கள் என வழங்கி வந்தன; வழங்க இல்லாத பொழுது அவர் உள்ளம் நாணி உரு மாறியது போல் அவை கிறமாறி வெளுத்துப்போயின என்பதாம். _

பிறர்க்குப் பயன்படும் அளவே மனிதன் பெருமையடைந்து பேரொளி பெறுகின்றான் ; பயனற்ற பொழுது நயனற்று அவன் கலிங்து படுகின்றான் என்பது இதில் உணர்ந்துகொள கின்றது.

மழை பெய்க கிலையினை வள்ளல்களுடன் வைத்து இவ்வாறு நம் உள்ளம் உவந்துகொள்ள உாைத்தார் ; அதன்பின் அம்மழை யாலான வெள்ளக்கின் பெருமையை விளக்குகின்றார்.