பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கம்பன் கலை நிலை

வெள்ளம் பெருகிய காட்சி,

மானம் நேர்ந்தறம் நோக்கி மனுநெறி போன தண்குடை வேங்தன் புகழென, ஞான முன்னிய நான்மறை யாளர்கைத் தானம் என்னத், தழைத்தது நீத்தமே. (ஆற்றுப்படலம் 5) சாயு நதியில் வெள்ளம்பெருகி ஒடிய நிலையினைவருணித்தபடியிது. நீக்கம் = வெள்ளம். நீக்கப்படுவது என்னும் ஏதுவான் வந்தது. தழைத்தல் = கிளைத்துப் பெருகல்.

மழை பெய்தவுடன் பல துள்ளி பெரு வெள்ளம் என்றபடி நீர்மிகப் பெருகி நதிகளில் கிமிர்ந்து ஒடும் ஆதலால் அவ் இயல் பினே உாைக்க வந்த இதில் கம்பர் உயிர்க்கு-உறுதியான சில உயர்கலங்களையும் உடன் உணர்த்தி யிருக்கின்றார்.

நீர்ப்பெருக்கு அளவிட முடியாதபடி மிகவும் அதிகமாயி ருந்த தென்பதை இாண்டு உவமைகளால் விளக்குகின்றார். புகழ் என க், தானம் என நீக்கம் தழைத்தது என்றது அக்கழைவு விளைவுகளின் நிலை தெரிய கின்றது.

.மானம் ஆவது யாண்டும் கிலைதாழாது கிற்றல். மனம் மழுங் காது கிற்கும் கிலைமையது. ஆதலால் மானம் என வந்தது. இழி வழிகளில் யாதும் இறங்காமல், பழிபாவங்களை நாணி, என்றும் விழுமிதாய் உயர்நிலையில் உறுதிசெய்து கிற்கும் கிலேயே மானம் என்க. இதல்ை அதன் மாட்சி புலம்ை.

மானமும் அறமும் பேணி மனு நீதி முறையே அாசபுரிங் தொழுகும் மன்னவனுடைய புகழ்போல் வெள்ளம் விரிந்தெழுங் தது என முன்னிரண்டடிகளில் குறித்தார்.

பாம்பரையாகச் சிறந்து வருகின்ற உயர்ந்த குடிப்பிறப்பில்

மானம் அடிப்படையாய் அமைந்திருக்கும் ஆதலால் மானம் நேர்ந்து ‘ என்றார். நேர்தல் = இயல்பாக எதிர்ப்படல்.

---

செல்வ நிலையில் சிறந்து எல்லாரையும் ஆளுகின்றாேம் என்ற செருக்கினல் மனம்போனபடியே ஒருவன் போவானுகில் அவன் மானம் அழிந்து, அறம் இழந்து, புகழ் ஒழித்து, பழிதுயாங்க ளில் அழுந்துவான் என்பது எதிர்மறையா இதில் உணர்ந்து கொள்ள கின்றது. அாசுக்கு அறிவுறுத்தி யுள்ள அமைதி அறிக.