பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கம்பன் கலை நிலை

மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறியே அரசன் ஒழுகிவரவேண்டும் என்று நம் கவிஞர்பிரான் உணர்த்தியுள்ள படியே இதுவும் உணர்வுதவி கிற்றலால் ஈண்டு உடன் எண்ண வந்தது. கருத்தமைதிகளைக் கருதிக் கொள்க.

ஞான நலம் வாய்ந்த நல்ல வேதியர் கையில் ஈந்த தானம் போலவும் வெள்ளம் பெருகியது என்றது அப்பெருக்கின் கிலை தெரிய கின்றது. உதவிய பொருள் சிறிதே ஆயினும் அதனை எற்றுக்கொண்ட பாத்திரத்தின் மகிமையால் பலன் பெரிதாதல் போல் பலவாகச் சிதறி விழுந்த சிறு துளிகள் ஒருமுகமாய் நதி யில் வந்து கூடியபொழுது நீர்ப்பெருக்கு நெடிது கிமிர்ந்து பொங் கிய தென்பதாம்.

Fo

வேகம். வேதங்கள் முழுவதையும் வழுவற ஒதி யுணர்ந்தாலும் ஞானம் படியாது ஈனம் படிந்துழல்வாரும் உளர்

மறை =

ஆதலால் அவரை விலக்குதற்கு ஞான முன்னிய நான் மறையா ளர் ‘ என்றார். உன்னுதல் = நினைத் கல். உள்ளத்துள் அழுந்தி யிருக்கல். சித்த சுத்தியும், கத்துவ ஞானமும், அவாவின்மை யும், ஆத்மானுபவமும் உடைய முத்தர்களே உத்தமமானதான யோக்கியராக இங்குக் குறிக்க கின்றனர். -

இத்தகைய ஞான சீலர்களுக்கு உதவிய தானம் அளவில்

சிறிதே ஆயினும் அது சிப்பியுள் வீழ்ந்த நீர்த்துளி முத்தாதல்

போல் அவர் சால்பினல் சாலவும் பெரியதாய் அதன் பலன்

மாலோங்கி நிற்கும் என்பது கருத்து.

‘ உதவி வரைத்தன் றுதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து குறள்-105) உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப கிழற்பயந்தாங்கு-அறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். இவை ஈண்டு எண்ணற் குரியன. இக்கவிகள் கம்பர் கருத்தில் ஊறியிருந்து பின்பு இவ்வாறு பீறிவந்துள்ளமை தேறலாகும். உயர்ந்தவர்க்கு உதவிய தானத்தின் பலன் மிகவும் ஒங்கி வளரும் என்பதை மாவலி மன்னன் வாமனருக்குத் தானம்