பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கம்பன் கலை நி லே

கட்டுக்கிடையாய் உப்புக் கச்சிக்கிடக்கின்ற கடல்நீர் மேகத் தின் வாய்ப்பட்டவுடன் உவர் நீங்கி எவர்க்கும் இனிய ரோதல் போல் இழிந்த உலோபியரிடம் வினேகுவிந்துகிடக்கும்பொருள் உயர்ந்த ஞானியர்கைப்பட்டபொழுது புனிதமாய் எல்லார்க்கும் இனிமை பயக்கருளும் என இது உணர்த்தி கிற்றல் காண்க. ஞானியர் கைத்தானம் என வெள்ளம் விரிந்த சுென் பகை அடி யொற்றி வேறொருபடியில் உருமாறி இதுவந்துள்ளமையை உய்த் துணர்ந்து கொள்க. இன்னும் ஒன்று காண்போம்.

‘ கள்ளம் கொலேகட் புலேகாமம்என் றைந்தும் அற்றார்க்கு

உள்ளம் தெளிந்தோர் தரும் உத்தம தானம் என்னப் பள்ளம் திடர்மால் வரை கானகப் பக்கம் எங்கும் வெள்ளம் பெருகிப் பரந்தோடி விரைந்த தன்றே.

(அறித்தந்திரபுசானம், நாட்டு, 6) தானம் என்னத் தழைத்தது நீத்தமே என்ற அடியினையே படி எடுத்து இதுவும் வந்திருத்தல் அறிக. இது பாடியவர் ஆசு கவி ராஜர் என்பவர். நமது கவிஞர்பிரான் கவிகளைக் கருத்தில் வாங் கிக்கொண்டு மற்றைக் சவிராயர்கள் விருத்தியடைந்து வந்திருக் கும் விதம் இவற்றால் அறியலாகும்.

நீர் நிலைமையைச் சொல்லவந்த இதில் நல்ல நீர்மைகள் பல துள்ளி விளங்குதல் காண்க.

ஒருவன் வருந்தி யீட்டிய பொருளை அறிவு நலம் கனிந்த பேலோர்க்கு உவந்து உதவின் அகல்ை அவன் சிறந்த பலனடை ந்து உயர்ந்து விளங்குவான் என்பது கருத்து.

மானம் பேணுக அறம்புரிக மனுவெறி ஒழுகுக ; புக ழொடு கோன்றுக ; கானம் செய்க; என இவ்வெள்ளக் கவியில் சில உறுதி நலங்களை நம் உள்ளம் பதியுமாறு கம்பர் உணர்த்தி யிருக்கும் திறனை உய்த்துணர்ந்து உயர் பயன் கொள்க.

இவ்வாறு பெருகிய வெள்ளத்தின் கிலையை, விலைமாதர், வணிகர், வானவில், வானார், கட்குடியபோடு சிலேடையில் ஒப்பவைத்துச் செப்பமாக வருணித்திருக்கின்றார். அவ்வருணனை கள் நட்ப வுணர்வை நவன்று கிற்கின்றன. பல சரித வரலாறு களையும் குறிப்பாக விளக்கியுள்ளன. அதன் பின்பு நதியில் வெள் ளம் வாம்பமைந்து ஒரு நெறியே ஒழுகிய நிலையைஉாைக்கலானர்.