பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கம்பன் கலை நிலை

என்றும் குன்றாமல் யாண்டும் வற்றாமல் இனிய நீர்மை யோடு ஒழுகிய நிலைமையில் குலமன்னர் ஒழுக்கத்தையும், உயிர் களைப் புரந்து வருவதில் காய்முலையையும் கதிநிலை கழுவி கின்ற தென்பதாம். உருவ அமைதியும், அரிய செயலும், இனிய பய லும் கூறியபடியிது.

தாய்முலை, பெற்ற பிள்ளையை மட்டும் பேணும்; கதி நீர் உலகத்தில் உற்ற பலவகை யுயிர்களுக்கும் உதவும் ஆதலால் சாயு, உயிர்க்கெலாம் தாய் முலை அன்னது ‘ என்றார். ஒவ் வோர் உயிர்க்கும் தனித்தனியே தாய்முலைபோல் அங்கதி இனிக் திருந்த தென்பதாம். இகனல் அதன் பான்மையும் மேன்மையும் பயனும் நயனும் இனிது புலம்ை.

புனிறுதிர் குழவிக்கு இலிற்று முலைபோலச்

சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்.” (புறம் 68)

என்பது கோஆர்கிழார் பாடியது. காவிரிநதிக்குக் காய் முலையை இதில் அவர் ஒப்புாைத்திருத்த லறிக. புனிறு - ஈன்றுள்ள இளமை. இலிற்றல் = சுரத்தல்.

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலேத் தாய்போல் மள்ளர் வேனிலின் மணற்றிடர் பிசைந்துகை வருட

வெள்ளநீரிரு மருங்குகால் வழிமிதக் தேறிப் பள்ள நீள்வயற் பருமடை யுடைப்பது பாலி “’

(பெரியபுராணம், திருக்குறிப்பு-22)

பாலி நதியை முலைக்காய் என இதில் குறித்துள்ளமை காண்க.

உாவு நீர் = கடல். நீர் நிறைந்த கடலிருந்தும் அதனல்

யாதும் பயன் இல்லை; இந் நதியால் உயர் பயன் உண்டு என விநயமாக நயம் காண வைத்தார். கடல் சூழ்ந்த உலகில் உடல் சூழ்ந்த உயிர்க்கெல்லாம் சாயுருதி உயிாாதாரமாய் உதவி வந்த தென்பதாம்.

அக்ர்ேப் பெருக்கு கிலப்பாப்பிலிருந்த பலவகைப் பொருள் களையும் கவர்ந்தெழுந்து, எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் ஈர்த்துக் கொண்டு ஆற்றில் அடர்ந்து சென்ற நிலையை ஆறு கவிகளால் வருணித்தார்; பின்பு எரிகுளம் கால்வாய்கள் யாவும் கிறைத்து முடிவில் அது கடலோடு கலக்க படியைக் கூறுகின்றார்.