பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கம்பன் கலை நிலை

பொடிகள் கிகழ்ந்துள்ளன ; எருமைகள் மிதித்துச் சென்ற கால டிகளில் கழுநீர் மலர்கள் சிதைந்திருக்கின்றன ; பாம்படித்த வயலின் சமவெளிகளில் பவளங்கள் ஒளிர்கின்றன ; நெற் பயிர் விளேயும் பழனங்களில் அன்னங்கள் ஆர்ந்துள்ளன ; அயலிடங் களில் செவ்விய கேன் கூடுகள் செறிந்துள்ளன ; அழகிய சோலை களில் வண்டினங்கள் மண்டி யிருக்கின்றன என்னும் இம் முதல் பாடலால் அங்கில வளங்களின் தலைமைக்காட்சியும், கம்பாது புல

மைக் காட்சியும் ஒருங்கே புலனுகின்றன.

வாம்பு - வரப்பு. நீர்நிலைத்து விளைவுக்கு இதமாக, வயல் களை அளவுபடுத்தி இருக்கலால் வரம்பு என வந்தது. குயம்புக செய்கரை. பாம்பு = பண்படுத்திய புலம். காம்பு - வயலுக்கு அயலே சாகுபடி செய்யாத வெளி கிலம். மேதி = எருமை.

இப்பாட்டில் முற்றுச் சொல் கொடுத்து ஒரு முடிவும் செய் யாமல் ஈட்டம் என மேலெழுச்சி தோன்ற எச்சமாக இசைத்து விட்டது அங்கிலவளன் முடிவுகூறமுடியாதென்பது கெரியஎன்க.

2. அடுக்க பாட்டில் “ஆறுபாய் அாவம்’ என்று தொட ங்கிப் பலவகை ஒலிகளை விளக்கி இருக்கிரு.ர். அாவம், அமலை, ஒசை, ஒதை, கமாம், து.ழனி என்பன ஒசையை ஒருபடியே உணர்க்கிவருமாயினும் கனித்தனியே ஒலிக் கூறுகளை தனித்து

ணா துவன்றுள்ளார்.

ஆறுகளில் நீர்பாய்ந்துபோகும் முழக்கங்களும், உழவர்கள் கரும்புகளே ஆலையில் இட்டு ஆட்டும் சக்கங்களும், அந்தக் கரும் பின் சாறுகள் ஊறிப்பாயும் ஒசைகளும், சங்குகள் முழங்கும் ஒலிகளும், காளை மாடுகளும் எருமைகளும் நீர் கிலைகளில் பாய் ந்து நீந்தும் நிலைமைகளும் இன்னவாருக எங்கே பார்த்தாலும் செழிப்பான இன்னேசைகளே அங்காட்டில் மலிந்திருந்தன என் பதை இப் ாட்டில் அறிகின்றாேம். வேலி = நிலம்.

3. அடுத்த கவியில் ஒரு நடனக் காட்சியை உருவகித் திருக்கிரு.ர். மருத கிலமாகிய அரசி ஒர் அழகிய நாடக சாலையில் அமர்ந்து சிறந்த நாட்டியத்தை உவந்து கண்டு உல்லாசமாக விற் றிருக்கின்றாள் என்றவாறு, தண்டலை = குளிர்பூஞ்சோலை.