பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை ii.9

வந்துள்ள அன்னம் கோசல தேசத்துப் பெண்களைப்போல் நடந்து பழகியது என்ற கல்ை அங்காட்டு நங்கையரின் கடை யமைதியும், விழிகிலேயும், எழில்நலனும் எளிது தெளிவாம்.

“ அன்னநடையும், அன்னமிலா ஐயர்நடையும் தளர்வெய்தக்

கன்னி நடக்கும் நடை கற்றாள்; கரும்புகசக்கும் மொழி பெற்றாள்” (பிரபுலிங்கலீலை) என மாயையின் நடையினைச் சிவப்பிரகாசசுவாமிகள் இதில் விளக்கியிருக்கும் அழகைப் பார்க்க. அன்னம் இலா ஐயர் என்றது உண்ணுது நோற்கும் கவசிகளே. அவரது நடை ஒழுக் கம் என்க. நடை யழகில் உயர்வுடைய அன்னம் இங்கே இடை தளா நேர்ந்தது மாயையின் நடை கிலையைக் கண்டு காணியதால். இதில் வந்துள்ள சொல்லழகையும் பொருளழகையும் சுவை ஒர் ந்து கொள்க. மொழிக்கு மொழி தித்தித்துக் கவிகள் பழுத்து வருகின்றன. சுவை தெரியின் உயர்சுகிகளாய் ஒளிமிகப்பெறுவர். நடை உவமைக்கு அன்னத்தை இந்நாட்டுக் கவிகள் எல்லா ரும் நயந்து கூறியிருக்கலால் அந்த அழகிய நீர்ப் பறவைகள் பண்டைக் காலத்தில் இங்கே மிகவும் பாவியிருந்துள்ளமை தெளி வாகின்றது.

பஞ்சவடி அருகே பன்னசாலை அமைத்து இராமர் அமர்ந் திருந்த பொழுது ஒரு நாள் மாலையில் சீதையோடு கோதாவரி நதியருகே உலாவி கின்றார். அவ்வமயம் அவ் இருவருடைய கடை எழில்களை ஒருவரின் ஒருவர் மருமமாய்க் கண்டு உள்ளங் களித்துள்ள படியை உலகிலுள்ள எல்லாரும் கானும்படி கம்பர் வெளியே தெளிவாகக் காட்டியிருக்கிறார். காவியச் சுவை கனிய அவர் பாவில் தீட்டியுள்ள தீவிய ஒவியம் அடியில் வருவது.

“ ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும்

சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்; மாதவள் தானும் ஆண்டு வந்துநீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள்). ’’

(ஆரணியகாண்டம், சூர்ப்ப, 5)

சதிபதிகள் இருவரும் தம் நடை எழிலை கிாலே நேரில் கண்டு அயல் அறியாமல் உளமகிழ்கூர்ந்து இளங்கை புரிந்துள்ள கிலையை இதில் அறிவுக் கண்ணுல் அறிந்து மகிழலாமே யன்றி