பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

கம்பன் கலை நிலை

                 
அதனால்,

புலவரை அரசன் புகழுறப் பேணி

நலமிகப் பெறவே நிலமிகப் பெறவே.

என வரும் இதனால் புலவரின் சீர்மை நீர்மைகள் தெரியலாகும். இதில் குறித்துள்ள உவமைநிலைகளை ஊன்றிநோக்கிப் பொருள் நலங்களை உய்த்துணர்த்து கொள்க. புலவர்கள் இங்ஙனம் தலைமையாகப் போற்றப்படுவதற்குக் காரணம் அறிவின் ஏற்றமேயாம்.

“தேவர் அனையர் புலவரும் ; தேவர்
தமரனையர் ஒரூர் உறைவார்; தமருள்ளும்
பெற்றன்னர் பேணி வழிபடுவார். கற்றன்னர்
கற்றாரைக் காத லவர்.’ (நான்மணிக்கடிகை 75)

இதில் புலவரைத் தேவரோடு ஒப்பவைத்து உரைத்திருத்தலறிக. இக்கவியின்பொருளைக்கருத்தான்றி நோக்கிக் கல்வி நலனை ஓர்ந்து கொள்க. மண்ணுலகில் உயர்ந்த அரசரினும் புலவர் சிறந்தவர்என முன்னம் தெரிந்தோம் ; இதில், விண்ணுலகில் விளங்கும் புண்ணியர்களாகிய தேவர்கள் என்றே அவரை எண்ணவேண்டும் என்பது கண்டோம்.

என்ன ஏதுவால் இன்ன பெருமை அன்னவர்க்கு எய்தியது? மனித நிலையில் பலபடிகள் ஏறி உன்னத நிலையையடைந்து உணர்


அறிவு நலம் சிறந்து உறுதியான இன்ப நிலையில் உயர்ந்திருத்தலால் 'புலவர் தேவர்' என நின்றார். அவரை அணுகியிருப்பவர் அவருடைய அருமையான இனிய உணர்வுரைகளைக் கேட்டுச் சுவர்க்கவாசிகள் போல் புண்ணியம் பேணிக் கண்ணியமடைந்து உவகை மிகுந்து வருவர் ஆதலால் “ஒர் ஊர் உறைவார் தமர் அனையர்” என்றார். அவரை ஆதரித்து நிற்ப வர், அறிவு நலங்களை எளிதடைந்து கொள்வர்.ஆதலால் “காதலவர் கற்றன்னர்” என்றார். அன்புடன் வழிபட்டு அவரைப் பேணி வருபவர் கல்விப் பயனாகிய உயர்நலனே ஒருங்கே பெற்று மகிழ்வ ராதலால் “வழிபடுவார் பெற்றன்னர்” என்றார். கற்றாரை அணுகி அன்புபுரிந்து ஆதரித்துவரின் அரிய இன்பநலங்களெல்லாம் எளிது கைவரும் என்பதாம்.