பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கம்பன் கலை நிலை

மலர்களைப் பார்த்து வாய் இதழ்கள் என்று நோய் செய்யாமல் ஒதுங்கிப்போவர்; இவ்வாறே கண்ட களைகள் யாவும் கம் காகலி களுடைய கண் முகம் வாய்களைப்போன்ற மலர்களாகவேதோன்றி னமையால் யாதொரு களையும் களைந்தெடாமல் வளைந்து வந்தார்

என்பதாம். கடைசியர் = மருதநிலப் பெண்கள்.

அங்காட்டில் உழவு தொழில்புரியும் இழிகுல மகளிரும் எழில் மிகுந்திருந்தார் என்ற இதல்ை உயர்குல மங்கையரின் வியனிலை விளங்கும்.

- முதல் மூன்றடிகளில் குறிக்க மள்ளாது உள்ள நிகழ்ச்சிக்கு ஒர் எதுவை வலியுறுத்தி அனுபவாசமான இனிய உலக நிகழ்ச்சி ஒன்றை இறுதியடியில் இணேத்து உறுதிபெற உணர்த்தியிருக் கிறார்.

இங்ஙனம் இசைப்பதை அலங்கா சாத்திரக்தில் வேற்றுப் பொருள் வைப்பு என்னும் அணி என்பர். அந்த அணி இலக் கணம் அடியில் வருவது காண்க.

‘’ முன்னென்று தொடங்கி மற்றது முடித்தற்குப் பின்னொரு பொருளே உலகறி பெற்றி ஏற்றிவைத் துரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே.”

(கண்டியலங்காரம் 46) ஒர் இடத்தில் அறிக்க ஒரு சிறப்புப் பொருளை உலகம் அறிந்த அனுபவமான பொதுப்பொருளோடு பொருத்தி விளக்கு வதே வேற்றுப்பொருள்வைப்பு என்னும் அலங்காம் என்பது இகல்ை அறிந்துகொள்ளலாம். வடநாலார் இதனை அர்த்தாந்தர நியாசம் என்பர். பாவையர்க்கு அணிபோல் பாவினை அலங் கரித்து கிற்றலால் இகனை அணி எனவும், அலங்காம் எனவும்

து.ாலோர் வழங்கலாயினர்.

இவ்வாரு?ன அணி நலங்கள் பல புனைந்து எழில்மிகுந்து இன்பநலங்கனிந்து கம்பர் பாடல்கள் பண்டமைந்துள்ளன. அவ் வமைதியை ஆங்காங்கு ஆய்ந்துனரின் அறிவின்பம் பெருகும்.

கோசல தேசத்து மள்ளர் காதல் வசக் காய்க்களைபறியாது

உலாவி கின்றார் என்றதற்கு உரிமையாகச் சிறியோர் பெண்கள்

பால் வைக்க நேயம் பிழைப்பரோ ? “ என்பதை இணேத்துக்