பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கம்பன் கலை நிலை

கொடும்புணரி விலங்கு போமுக் கடுங்காலொடு கரை சேர நெடுங்கொடிமிசை இதை எடுத்து இன்னிசைய முரசமுழங்கப் பொன்மலிங்த விழுப்பண்டம் நாடார நன்கிழி தரும் ஆடியற் பெருகாவாய் மழை முற்றிய மலேபுரையத் துறை முற்றிய துளங்கிருக்கை.” (மதுரைக்காஞ்சி.) இது பாண்டி நாட்டுத் துறைமுக நிலையைக் குறித்துள்ளது. கருமேகம் சூழ்ந்த மலைபோலக் கடல் அருகே கப்பல் கின் றது என இதில் காட்டியிருக்கும் காட்சியைக் கருத்தான்றி நோக்குக. இதை - பாய். இங்குக் குறித்த இவற்றால் கடல் வழியே கலங்கள் சென்று வந்த வகையும், இத்தேசத்தில் வளங் கள் பல மருவி யிருக்கநிலையும், பழம்பெருமையும் பிறவும் அறிய லாகும்.

“ நீரின் வந்த கிமிர்பரிப் புரவியும்,

காலின் வந்த கருங்கறி மூடையும், வடமலைப் பிறந்த மணியும், பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும், அகிலும், தென்கடல் முத்தும், குணகடல் துகிரும், கங்கை வாரியும், காவிரிப் பயனும், ஈழத்துணவும், காமுகத்து ஆக்கமும், அரியவும் பெரியவும் தெரிய ஈண்டி வளங்தலை மயங்கிய கனக்தலே மறுகின் நீர்நாப்பண்ணும் கிலத்தின் மேலும் ஏமாப்ப இனிது துஞ்சி.” (பட்டினப்பாலே) புகார் நகரின் கடல்வள நிலையை உாைக்கபடி யிது. பண்டைக்காலத்தில் இக்காடிருந்த கிலேயும், மணி பொன் முத்து பவளம்முதலிய அரும்பெரும்பொருள்கள் பல கப்பல்களில் வந்து இறங்கிய இயல்பும், அயல்நாடுகளுக்கு இங்கிருந்து பண்டங்கள் ஏற்றுமதியான விதமும், துறைமுகங்களிலும் நகரங்களிலும் அள விடலரியபடி பொருள்கள் குவிக்கிருந்த வகையும் தொகையாக இதன் கண் அறிந்துகொள்ளலாம். கறிமூடை - மிளகுப்பொதி. ஈழம் - இலங்கைத் தீவு. காமுகம் - பர்மா தேசம்.