பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் நிலை

13


வொளி மிகுந்துள்ளமையால் தெய்வநிலையில் சேர்த்துப் புலவர் இங் ஙனம் போற்ற நின்றார் என்க.

இத்தகைய தெய்வத் திருவுடைய புலவர் பெருந்தகைகளை நாம் தலைமையாகப் பெற்றிருக்கின்றாேம். நம் நாட்டில் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரிருந்த எண்ணரிய புலவர்கள் நமக்கு எட்டாது போயினர். நம் முன்னேர்களாகிய அன்னார்கள் நமக்கு அருள் புரிந்து ஆக்கி வைத்திருந்த அருமை நூல்களை யெல் லாம் அலைகடல் கொண்டுபோய்த் தலைமறையச் செய்தது. அந்நிலையினை எண்ணுந்தோறும் ஐயகோ! எத்துணேயோ புத்துணர்வு நூல்கள் பொயொழிந்தனவோ? என்று அறிஞர்கள் வாயுழந்து வருந்துகின்றார். “தமிழ்த் தென்னாட்டை ஊழி என வந்து மும்முறை ஆழி கவர்ந்தது ; எழுநூறு காவதப் பாப்பிலிருந்த நாற்பத்தொன்பது நாடுகளும் தொலைந்து போயின” என்றால் அப்போக்கில் புலமை நலஞ்சுரந்த கலைநலங்கள் எவ்வளவு ஒழிந்துபோயிருக்கும் அதனால் நமது மூதாதையர்களுடைய ஆதரவுகளை நாம் எவ்வளவு இழக்கிருக்கின்றோம் என்பதை எண்ணி ஆராயின் இரங்கநேரும்.

பண்டைக் காலத்திலிருந்த புலவர் பெருமக்களில் போனவர் போக மீதமாய் நூல்கள் மூலம் இதுவரை நமக்குக் கிடைத்திருப்ப வர் எறக்குறைய நானுாற்றெண்பது பேராவர். பிற்காலப் புலவர் களும் சிலர் உளர். சென்ற முந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் . இன்னிசைப் புலமை ஈண்டு இடம் பெறவில்லை.

கல்வி நலம் சிறந்து நல்லியல்புமிகுந்து சீலம் கொடை வீரம் நியாயம் முதலிய சால்புகள் யாவும் சால அமைந்து இக்நாடு ஒரு காலம் மிகவும் பீடு பெற்றிருந்தது. அப்பேற்றை மீண்டும் கம்மவர் பாண்டுப் பெறுவமோ? அக்காலத்தில் செல்வர்களும் அரசர்களும் கல்வியாளரைக் கண்ணினும் உயிரினும் இனியராகக் கருதிப்பேணி வந்தார். அவரும் கிறைமதியாளாாய்த் திருந்திய பண்பும் பெருங் தன்மையும் வாய்ந்து எல்லா வுயிர்களும் இன்புறம்படி அன்பு புரிந்து நண்புமிகுந்து கயன் ஆற்றிவந்தார். கல்வியும் செல்வமும் உயிரும் உடலும்போல் ஒன்றை ஒன்று பேணி உரிமையுடன. மருவி இருந்தன. அதல்ை அனைவரும் நலமுற லாயினர். அக் ாளில் செல்வமும் கல்வியுமுடையார் இக்காட்டில் இருக்க அமைதி