பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கம்பன் கலை நிலை

அரச பாரம் விரும்பிய மூப்பெனும் வீடு கண்ட யான் இரும்பியல் அனந்தனும், இசைக்த யானையும், பெரும்பெயர்க் கிரிகளும், பெயரத் தாங்கிய அரும்பொறை இனிச்சிறி தாற்றல் ஆற்றலேன்.’

(அயோத்தி, மந்திரப்படலம் 16) ஆதிசேடனும், கிக்குயானைகளும், எட்டுமலைகளும் பொறை யாறி நிற்க யான் இதுவரை அரசாற்றி வந்தேன்; இனி என்னல் அது செய்ய இயலாது ; எனது அருமை மகன் இராமனிடம் அாசடாரத்தை ஒப்பிவித்துவிட்டு நான் ஆறுதலடைந்திருக்க வேண்டும் என்று அமைச்சரிடம் தசாகன் இவ்வாறு உசைக் திருக்கிருன். இரும்=பெரிய பியல் - பிடர். அரும்பொறை என்றது அரச பாக்கை. உலகை ஆளுவதிலுள்ள பொறுப்பும் உண்மையான அரசனிலைமையும் இதல்ை உனாலாகும்.

அட்டகுல பருவதங்கள் முதலியன உலகிற்கு ஆகாாமா யுள்ளன என்பது நூல் மாபாதலால் அவை இவ்வாறு நாவல வந்தன. சுமை நீங்கி அவை யாவும் சம்மா கிற்க இம்மாநிலம்

ழுவதும் இன்புற நான் தாங்கி வங்கேன் என்பதாம்.

T. இசைகெழு வேந்தன் காப்பில் பூகலம் பொறை யுயிர்த் திருக்கும் எனக் காம் முன்னம் இசைக் கதைக் கசாகன் வாக் கில் வைத்துக் கம்பர் உறுதி செய்கிருக்கும் கிற க்கை இதில் ஊன்றிப் பார்க்க. இவரது உாைத்திறம் எங்கும் உய்த்துணர்

வுடையது.

முறையறிதல் முதலிய இறைமைக் குணங்கள் யாவும் கசாக னிடம் இனிகமைந்திருந்தன என்பதும் இதல்ை உணரவக்கது.

சாக்குகள் ஏற்றாமல் துறைமுகங்களில் நின்ற மாக்கலங் க%ளப் பார்க்கோம் ; இனி நகர்ப் புறங்களில் நடந்த சேவல் சண்டையைச் சிறிது பார்ப்போம்.

சேவல் போர். கறுப்புறு மனமும் கண்ணிற் சிவப்புறு சூட்டும் காட்டி உறுப்புறு படையிற் ருக்கி உறுபகை யின்றிச் சீறி வெறுப்பில களிப்பின் வெம்போர் மதுகைய வீரவாழ்க்கை மறுப்பட ஆவி பேணு வாரணம் பொருத்து வாரும்.

மதுகை = மனவலிமை. (நாட்டுப்படலம் 16)