பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 147

தன் தங்கக் கட்டி வயிற்றிற் பிறந்த சிங்கக்குட்டி என அக்காளையைச் சுட்டியபடியிது. வீரத்திறலைப் பெண்களும் இங் கனம் விழைந்து போற்றிவந்தார் என்றால் போர்புரிதலில் அங் நாள் ஆடவர் கொண்டிருந்த ஆர்வம் என்ன நிலையில் இருக்கிருக் கும் என்பதை ஈண்டு எண்ணி நோக்கவேண்டும்.

நானில மதனின் உண்டு போர்என நவிலின் அச்சொல் தேனினும் களிப்புச் செய்யும் சிங்தையர்.

(சுந்தர காண்டம், கிங்கரர்-4) எனக் கம்பர்.வாக்கிலிருந்து வந்துள்ள இந்த விர மொழிகள் எந்த நாட்டவர் சிந்தை நிலையை எண்ணி வந்ததோ ? தம்சொந்த அனுபவத்தில் கண்ட முந்தையோர் நிலைமையையே இங்ானம் உணர்ச்சி ததும்ப உள்ளங்களிக்க உாைத்திருக்கிறார். இப்போர்க் களிப்பை இந்நாளில் யார்க்கு அளிப்பது ? நமது காட்டின் தற்

கவிஞர் சிலர் கனிந்து பாடுகின்றார். பாட்டே வேண்டாம் ; வச னந்தான் வேண்டும் என்று கோட்டிகொண்டு கிற்கும் இக்காலத் தில் கோட்டித்தனமாய்ப் பாட்டுகளும் குகித்து வருகின்றன. நாட்டுப்பாட்டாதலால் கொஞ்சம் கேட்டுக்கொள்வோம்.

பண்டிருந்த வீரம். போர்என்று வேருென்றை வழிப்போக்கர் புகன்றாலும்

புயங்கள் வீங்கி நேரொன்ற வருகின்ற நேரலர் யார் ? என விரைந்து

நெடுவேல் வாங்கித் தாரொன்று போர்வீரர் தழைத்திருந்த இந்நாட்டில்

சமருக் கான | பேரெங்கே எனத் தேடும் பிழைபெருகி யுள்ளதே

பீழை என்னே!” (1)

இன்றுள்ள இயல்பு. வில்லாலும் சொல்லாலும் உலகையெல்லாம் வெல்லவல்ல

வீர ரான நல்லார்கள் பலர்தோன்றி நண்ணிகின்ற கின் வயிற்றில்

நாங்கள் தோன்றிப் பல்லாலே இதழதுக்கிப் பயத்தாலே உடல்நடுங்கிப்

பதுங்கு கின்றாேம் பொல்லாத நிலைமையிது போய்த் தொலையும் காலமென்றாே

புகல்வாயம்மா ?” (இந்தியத்தாய்நிலை) (3)